சிஎஸ்கே - குஜராத் போட்டியில் மாற்றம்

சிஎஸ்கே - குஜராத் போட்டியில் மாற்றம்
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் தொடரில் வரும் 26-ம் தேதி குஜ​ராத் டைட்டன்ஸ் - சிஎஸ்கே அணி​கள் அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் மோதும் வகை​யில் அட்​ட​வணை வெளியிடப்​பட்டு இருந்​தது. இந்​நிலை​யில் இதில் தற்​போது பிசிசிஐ மாற்றம் செய்​துள்​ளது.

இதன்​படி இந்த ஆட்​டம் அதே நாளில் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் பிற்​பகல் 3.30 மணிக்கு நடை​பெறும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஏப்​ரல் 26-ம் தேதி அகம​தா​பாத்​தில் மாநக​ராட்​சித் தேர்​தல் நடை​பெறுகிறது. இதை கருத்​தில் கொண்டு இந்த மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன் தொடர்ச்​சி​யாக சிஎஸ்கே - குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதும் போட்டி வரும் மே 21-ம் தேதி அகம​தா​பாத்​தில் இரவு 7.30 மணிக்கு நடை​பெறும்​.

சிஎஸ்கே - குஜராத் போட்டியில் மாற்றம்
ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in