ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்

ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் ட்ரம்ப் அறிவிப்பு எதிரொலி
ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஈ​ரானின் எண்​ணெய் ஏற்​றும​தியை முடக்​கும் முயற்சி​யில் அமெரிக்கா தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் கச்சா எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்​குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்​தப்​பட்​டுள்​ளன.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரத் தடைகளால் ஈரானிட​மிருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்தி வைத்​திருந்​தது. இருப்​பினும், மேற்கு ஆசி​யப் போர்ச் சூழலால் சர்​வ​தேச சந்​தை​யில் ஏற்​பட்​டுள்ள எரிசக்தி நெருக்​கடியைச் சமாளிக்​கும் வகை​யில், ஏற்​கெனவே கப்​பல்​களில் ஏற்​றப்​பட்ட எண்​ணெயை மட்​டும் கொள்​முதல் செய்ய கடந்த மாதம் அமெரிக்கா தற்​காலிக விலக்கை இந்​தி​யா​வுக்கு அளித்​தது. இதன் அடிப்​படை​யில், ஈரான் உள்​ளிட்ட நாடு​களிட​மிருந்து எண்​ணெய் வாங்​கப் போவ​தாக உலகின் 3-வது பெரிய நுகர்வு நாடான இந்​தியா அறி​வித்​திருந்​தது.

இதற்​கிடை​யில், ஈரானுட​னான அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​த​தால், ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக வரும் கப்​பல்​களை முற்​றுகை​யிடப்​போவ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

இந்த அறி​விப்​பு, இந்​தி​யா​வுக்கு அளிக்​கப்​பட்ட தற்​காலிக விலக்கு மற்​றும் தற்​போதைய கொள்​முதல் நடவடிக்​கை​களில் எத்​தகைய தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​பது இன்​னும் தெளி​வாகத் தெரிய​வில்​லை. இந்த நிலை​யில்​தான் கச்சா எண்​ணெயைக் ஏற்​றிக் கொண்டு வந்த இரு ஈரானிய கப்​பல்​கள் இந்​தி​யா​வில் நங்​கூரமிட்டு நிறுத்​தப்​பட்​டுள்​ளன.

அதில் ஒன்​று​தான் பெலிசிட்​டி. தேசிய ஈரானிய எண்​ணெய் நிறு​வனத்​திற்​குச் சொந்​த​மான இந்​தக் கப்​பல், 20 லட்​சம் பேரல் கச்சா எண்​ணெ​யுடன் ஞாயிற்​றுக்​கிழமை இரவு குஜராத்தின் சிக்கா துறை​முகத்​திற்கு அருகே நங்​கூரமிட்​டது. இது மார்ச் மாத நடுப்​பகு​தி​யில் ஈரானின் கார்க் தீவிலிருந்து எண்​ணெயை ஏற்றி வந்​தது.

இரண்​டாவ​தாக ஜெயா என்ற ஈரானிய கப்​பல் ஒடிசாவின் பாரதீப் துறை​முகத்​திற்கு அருகே நிறுத்​தப்​பட்​டுள்​ளது. அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் ஈரான் மீது தாக்​குதலைத் தொடங்​கு​வதற்கு முன்​பே, பிப்​ர​வரி இறு​தி​யில் இது 20 லட்​சம் பேரல் எண்​ணெ​யுடன் பயணத்தை தொடங்​கியது. இந்​தக் கப்​பலின் உரிமை​யாளர் குறித்த விவரங்​கள் தெளி​வாகத் தெரிய​வில்​லை. பொது​வாக ஈரானின் நிழல் கப்​பல் வரிசை​யில் இது இடம்​பெற்​றுள்​ளது.

பாரதீப் துறை​முகத்தை இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனம் பயன்​படுத்தி வரு​கிறது. சிக்கா துறை​முகத்தை ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் மற்​றும் பாரத் பெட்​ரோலி​யம் ஆகிய நிறு​வனங்​கள் பயன்​படுத்தி வரு​கின்​றன. இரண்டு கப்​பல்​களில் உள்ள எண்​ணெயை கொள்​முதல் செய்​தது எந்த நிறு​வனம் என்​பது குறித்​து இது​வரை அதி​காரப்பூர்​வ தகவல்​ இல்​லை.

ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்
திட்​ட​மிட்டு பவுன்​ஸர்​களை வீசுவதில்லை: மனம் திறக்கும் கிருணல் பாண்​டியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in