

ஷாங்காய்: உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் சாஹில் ஜாதவ் 147-144 என்ற புள்ளிகள் கணக்கில் டென்மார்க்கின் மார்ட்டின் டாம்ஸ்போவை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தத் தொடரில் இந்தியாவின் முதல் பதக்கமாக இது அமைந்தது.