

நியூயார்க்: நடப்பு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி ஜூன் 29 நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இந்த சுற்றில் எந்தெந்த அணிகள், யார், யாருடன் விளையாடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 48 அணிகள் பங்கேற்று முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின. ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 12 பிரிவுகளாக இந்த சுற்று நடைபெற்றது. இதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’-க்கு முன்னேறின.
அந்த வகையில் இந்த 24 அணிகள் போக மீதமுள்ள 8 அணிகளுக்கான வாய்ப்பை இந்த தொடரில் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் காங்கோ, ஸ்வீடன், கானா, ஈக்வேடார், போஸ்னியா & ஹெர்சகோவினா, அல்ஜீரியா, பராகுவே, செனகல் ஆகிய 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
‘ரவுண்ட் ஆப் 32’ ஆட்டங்களின் விவரம்
>> தென் ஆப்பிரிக்கா vs கனடா - ஜூன் 29 - அதிகாலை 12.30
>> பிரேசில் vs ஜப்பான் - ஜூன் 29 - இரவு 10.30
>> ஜெர்மனி vs பராகுவே - ஜூன் 30 - அதிகாலை 2.00
>> நெதர்லாந்து vs மொராக்கோ - ஜூன் 30 - காலை 6.30
>> ஐவரி கோஸ்ட் vs நார்வே - ஜூன் 30 - இரவு 10.30
>> பிரான்ஸ் vs ஸ்வீடன் - ஜூலை 1 - அதிகாலை 2.30
>> மெக்சிகோ vs ஈக்வேடார் - ஜூலை 1 - காலை 6.30
>> இங்கிலாந்து vs காங்கோ - ஜூலை 1 - இரவு 9.30
>> பெல்ஜியம் vs செனகல் - ஜூலை 2 - அதிகாலை 1.30
>> அமெரிக்கா vs போஸ்னியா & ஹெர்சகோவினா - ஜூலை 2 - அதிகாலை 5.30
>> ஸ்பெயின் vs ஆஸ்திரியா - ஜூலை 3 - அதிகாலை 12.30
>> போர்ச்சுகல் vs குரோஷியா - ஜூலை 3 - அதிகாலை 4.30
>> சுவிட்சர்லாந்து vs அல்ஜீரியா - ஜூலை 3 - காலை 8.30
>> ஆஸ்திரேலியா vs எகிப்து - ஜூலை 3 - இரவு 11.30
>> அர்ஜெண்டினா vs கேப் வெர்டே - ஜூலை 4 - அதிகாலை 3.30
>> கொலம்பியா vs கானா - ஜூலை 4 - காலை 7.00