ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து
Updated on
1 min read

டோக்கியோ: ஜப்​பானின் டோக்​கியோ நகரில் ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 12-ம்நிலை வீராங்​க​னை​யும், ஒலிம்​பிக்​கில் 2 முறை பதக்​கம் வென்​றவரு​மான இந்​தி​யா​வின் பி.வி.சிந்து, முன்​னாள் உலக சாம்​பி​யான ஜப்​பானின் நோஸாமி ஒகுக​ரா​வுடன் நேற்று மோது​வ​தாக இருந்​தது.

ஆனால் கடைசி நேரத்​தில் ஒகு​கரா போட்​டி​யில் இருந்து விலகினார். இதனால் பி.​வி.சிந்து அரை இறு​திக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்​றில் பி.​வி.சிந்​து, டோக்​கியோ ஒலிம்​பிக் சாம்​பிய​னான சீனா​வின் சென் யுஃபெய்​-​யுடன் மோதுகிறார்.

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து
மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in