4-வது சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா

4-வது சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா
Updated on
1 min read

பாஃபோஸ்: சைப்​ரஸ் நாட்​டில் உள்ள பாஃ​போஸ் நகரில் கேண்​டிடேட்ஸ் செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் 4-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்.பிரக்ஞானந்தா, ஜெர்​மனி​யின் மத்​தி​யாஸ் ப்ளூபாமுடன் மோதி​னார். இதில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய பிரக்​ஞானந்தா 37-வது நகர்த்​தலின் போது டிரா செய்​தார்.

உஸ்​பெகிஸ்​தானின் ஜவோகிர் சிந்​தா​ரோவ், அமெரிக்​கா​வின் ஃபேபி​யானோ கரு​னா​வுடன் மோதி​னார். இதில் 36-வது நகர்த்​தலின் போது ஜவோகிர் சிந்​தா​ரோவ் வெற்றி பெற்​றார். இன்​னும் 10 சுற்​றுகள் உள்ள நிலை​யில் ஜவோகிர் சிந்​தா​ரோவ் 3.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார்.

ஃபேபி​யானோ கருனா 2.5 புள்​ளி​களு​டன் 2-வது இடம் வகிக்​கிறார். மத்​தி​யாஸ் ப்ளூ​பாம், பிரக்​ஞானந்​தா, நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி ஆகியோர் தலா 2 புள்​ளி​களு​டன் முறையே 3 முதல் 5-வது இடத்​தில் உள்​ளனர். சீனா​வின் வெய் யி 1.5 புள்​ளி​களு​டன் 6-வது இடத்​தி​லும், அமெரிக்​கா​வின் ஹிகாரு நகமுரா 1.5 புள்​ளி​களு​டன் 7-வது இடத்​தி​லும், ரஷ்​யா​வின் ஆண்ட்ரே எசிபென்கோ ஒரு புள்​ளி​யுடன் 8-வது இடத்​தி​லும் உள்​ளனர்.

4-வது சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா
ஆ.ராசா பேசியதாக வெளியான ஆடியோ: சுட்டிக்காட்டி பழனிசாமி விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in