ஆ.ராசா பேசியதாக வெளியான ஆடியோ: சுட்டிக்காட்டி பழனிசாமி விமர்சனம்

ஆ.ராசா பேசியதாக வெளியான ஆடியோ: சுட்டிக்காட்டி பழனிசாமி விமர்சனம்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக எம்பி ஆ.ராசா பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது திமுகவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, இந்த ஆடியாவை முன்வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: ‘‘2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கனிமொழியும், ஆ.ராசாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயிலில் இருந்த ஆ.ராசா ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், திமுகவில் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை ராசாவுக்கு காட்டவில்லை. சமூக நீதி பேசும் திமுகவில் சாதியப் பாகுபாடு இருக்கிறது. கலைஞர் டிவிக்கு பணம் போனதை ஒப்புக்கொள்கிறார். கருணாநிதியின் இறுதிக் காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியாகத்தான் வைத்திருந்தார் என்று ராசா கூறுகிறார்.

கருணாநிதியின் இறுதிகாலத்தில் ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பிரச்னை ஏற்பட்டது அதனால்தான் இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை என்கிறார். ஸ்டாலினுக்கு பெரிய மூளை இருக்குதா? டெல்லிக்கு போனால் ஆங்கிலத்தில் கிழித்துவிடுவாரா? கனிமொழியை ஒருநாளும் நம்ப மாட்டார், என்னை எப்போதும் கட்சியில் இருந்து வெளியில் தள்ளமுடியாது என்கிறார்.

ஸ்டாலின் அவரது அப்பாவை கைதி போல வைத்திருந்தார், சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர் நாட்டு மக்களை எப்படி வைப்பார், உண்மை செய்தி ராசா மூலம் வெளியில் வந்துவிட்டது. திமுகவின் இறுதி அத்தியாயத்தை ஸ்டாலின் எழுதுகிறார்’ என்று ராசா பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

ஆ.ராசா பேசியதாக வெளியான ஆடியோ: சுட்டிக்காட்டி பழனிசாமி விமர்சனம்
“பாசிசம் என்று சொன்ன பாஜக இப்போது பாயாசம் ஆகிவிட்டதா?” - விஜய்க்கு சீமான் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in