சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது பாகிஸ்தான்: இலங்கைக்கு எதிராக ஆறுதல் வெற்றி! - T20 WC 2026

சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது பாகிஸ்தான்: இலங்கைக்கு எதிராக ஆறுதல் வெற்றி! - T20 WC 2026
Updated on
2 min read

கண்டி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இலங்​கையை 5 ரன்களில் வீழ்த்தி பாகிஸ்​தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த பிரி​வில் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதனால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த ஆட்​டம் இலங்கையில் கண்டி நகரில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் நடை​பெற்​றது. இதில் முதலில் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 212 ரன்​கள் எடுத்​தது.

பாகிஸ்​தான் அணி​யின் தொடக்க ஆட்​டக்​காரர் சாஹிப்​சாதா ஃபர்​ஹான் அதிரடி​யாக விளை​யாடி சதமடித்​தார். இந்த உலகக் கோப்​பை​யில் அவர் விளாசும் 2-வது சதமாகும் இது. 60 பந்​துகளில் 9 பவுண்​டரி, 5 சிக்​ஸர்​களு​டன் 100 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார் அவர்.

பஹர் ஸமான் 42 பந்​துகளில் 84 ரன்​கள் குவித்​தார். கவாஜா நபாய் 2, முகமது நவாஸ் 0, சல்​மான் அலி ஆகா 0, ஷதப் கான் 7 ரன்​களில் வீழ்ந்​தனர். இலங்கை அணி தரப்​பில் தில்​ஷன் மதுசங்கா 3, தசன் ஷனகா 2, துஷ்மந்தா சமீரா ஒரு விக்​கெட் வீழ்த்​தினர்.

முதல் விக்​கெட்​டுக்கு ஃபர்​ஹான், பஹர் ஸமான் ஜோடி 176 ரன்​கள் குவித்து சாதனை படைத்​தது. டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் எந்​தவொரு விக்​கெட்​டுக்​கும் குவிக்​கப்பட்ட அதி​கபட்ச ரன்​களாக இது அமைந்​தது. இதற்கு முன்பு இதே உலகக் கோப்​பை​யில் நியூஸிலாந்து வீரர்​கள் டிம் செய்​பர்ட், பின் ஆலன் ஜோடி 175 ரன்​கள் குவித்ததே சாதனை​யாக இருந்​தது.

கோலி சாதனை முறியடிப்பு: இந்​தப் போட்​டி​யில் சாஹிப்​சாதா ஃபர்​ஹான் அதிக ரன்​களைக் குவித்து இந்​திய வீரர் விராட் கோலி​யின் சாதனையை முறியடித்​தார். 2014-ல் நடை​பெற்ற உலகக் கோப்பை போட்​டி​யில் விராட் கோலி 319 ரன்​கள் குவித்​திருந்​தார். அந்த சாதனையை இந்த உலகக் கோப்​பைப் போட்​டி​யில் ஃபர்​ஹான் 383 ரன்கள் எடுத்து முறியடித்​தார்.

இதையடுத்​து 213 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் இலங்கை அணி விளை​யாடத் தொடங்​கியது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது இலங்கை. இதனால் 5 ரன்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி இலங்கைக்கு நம்பிக்கை கொடுத்தார் ஷனகா. இருப்பினும் அவரால் வெற்றிக்கு தேவையான அந்த ஆறு ரன்களை பெற்றுத்தர முடியவில்லை.

சூப்பர் குரூப்-2 பிரிவில் இங்கிலாந்து அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த பிரிவில் இருந்து முன்னேறும் மற்றொரு அணி எது என்ற சூழல் இருந்தது. ஏனெனில், நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அந்த வாய்ப்பில் இருந்தன. இரண்டு அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றை முடித்தன. இதில் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது பாகிஸ்தான்: இலங்கைக்கு எதிராக ஆறுதல் வெற்றி! - T20 WC 2026
அரை இறு​திக்கு முன்​னேறப் போவது யார்? இந்​தியா - மே.இந்தியத் தீவு​கள் இன்று பலப்​பரீட்சை | T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in