2-வது ஒரு​நாள்: 6 விக்கெட்கள் வித்தி​யாசத்​தில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது நியூஸிலாந்து

2-வது ஒரு​நாள்: 6 விக்கெட்கள் வித்தி​யாசத்​தில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது நியூஸிலாந்து
Updated on
1 min read

டாக்கா: வங்​கதேச அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. டாக்கா நகரில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 48.4 ஓவர்​களில் 198 ரன்​களுக்கு ஆட்டமிழந்​தது.

அதி​கபட்​ச​மாக தொடக்க வீர​ரான நிக் கெல்லி 102 பந்துகளில், 14 பவுண்​டரி​களு​டன் 83 ரன்​கள் சேர்த்​தார். ஹென்றி நிக்​கோல்ஸ் 13, வில் யங் 2, கேப்​டன் டாம் லேதம் 14, முகமமு அப்​பாஸ் 19, டீன் ஃபாக்​ஸ்​கி​ராஃப்ட் 15, ஜோஷ் கிளார்க்​சன் 6, பிளேயர் டிக்​னர் 12, ஜெய்​டன் லெனாக்ஸ் 0, வில் ஓ’ரூர்க் 6 ரன்​களில் நடையை கட்​டினர்.

வங்​கதேச அணி தரப்​பில் வேகப்​பந்து வீச்​சாள​ரான நஹித் ராணா 10 ஓவர்​களை வீசி ஒரு மெய்​ட​னுடன் 32 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். ஷோரிஃபுல் இஸ்​லாம் 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். 199 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த வங்​கதேச அணி 35.3 ஓவர்களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 199 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

தன்​ஸித் ஹசன் 58 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​களும், நஜ்​முல் ஹோசைன் ஷான்டோ 71 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களுடன 50 ரன்​களும் விளாசினர்.

6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வங்​கதேச அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்கெட் போட்​டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்​துள்​ளது. முதல் ஒரு​நாள் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 26 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் போட்டி சட்​டோகி​ராமில் வரும் 23-ம்​ தேதி நடை​பெறுகிறது.

2-வது ஒரு​நாள்: 6 விக்கெட்கள் வித்தி​யாசத்​தில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது நியூஸிலாந்து
ஹார்முஸ் பகுதியில் ஈரான் சரக்கு கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in