மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் மெக்கல்லம்? - பீட்டர்சன் கணிப்பு

மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் மெக்கல்லம்? - பீட்டர்சன் கணிப்பு
Updated on
1 min read

சென்னை: அடுத்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் மீண்டும் இணைய உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 ஆட்டங்களில் ஐந்து தோல்வியை பெற்றுள்ளது. மழையால் பஞ்சாப் கிங்ஸ் அணி உடனான ஆட்டம் கைவிடப்பட்டது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் அந்த அணி உள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் கேகேஆர் சொதப்புகிறது.

இந்தச் சூழலில் சமூக வலைதளத்தில் கெவின் பீட்டர்சன் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். “அடுத்த சீசனில் Baz மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார். இந்த ட்வீட்டை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்” என அதில் பீட்டர்சன் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டில் தொடங்கிய முதலாவது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் 158 ரன்களை கொல்கத்தா அணிக்காக மெக்கல்லம் விளாசி இருந்தார். தொடர்ந்து 2020 முதல் 2022 சீசன் வரையில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் செயல்பட்டார்.

அதன் பிறகு அவர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இணைந்தார். அவரது பயிற்சியின் கீழ் 2021 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. வரும் 2027 இறுதி வரையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட மெக்கல்லம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இத்தகைய சூழலில் பீட்டர்சனின் பதிவு பேசு பொருளாகி உள்ளது.

மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் மெக்கல்லம்? - பீட்டர்சன் கணிப்பு
கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி | ஐபிஎல் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in