கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி | ஐபிஎல் 2026

கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி | ஐபிஎல் 2026
Updated on
1 min read

அகமதாபாத்: ஐபிஎல் 2026 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 

நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் அஜிங்க்யா ரஹானே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அங்க்ரிஷ் ரகுவன்ஷி (8), டிம் சீஃபர்ட் (19) ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேற, கொல்கத்தா 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இந்த இக்கட்டான நிலையில் அதிரடியாக ஆடிய கமரூன் கிரீன், 55 பந்துகளில் 79 ரன்கள் குவித்து அணியை மீட்டெடுத்தார். அவருக்குத் துணையாக ரோவ்மேன் பவல் 27 ரன்கள் சேர்த்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. சாய் சுதர்சன் 22 ரன்களில் வெளியேறினாலும், மறுமுனையில் நின்ற சுப்மன் கில் 50 பந்துகளில் 86 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். ஜோஸ் பட்லர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் பரபரப்பு நிலவினாலும், குஜராத் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் தனது தரவரிசையை உயர்த்திக் கொண்டுள்ளது.

கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி | ஐபிஎல் 2026
“கடினமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்” - தோல்விக்குப் பிறகு ஹர்திக் வேதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in