

திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 42 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 87 ரன்களும், பாலசுப்பிரமணியம் சச்சின் 43 பந்துகளில், 5 சிக்ஸ்ர்கள், 9 பவுண்டரிகளுடன் 84 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து 240 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மதுரை பேந்தர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. சதுர்வேத் 47 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் விளாசி மிரட்டினார். சித்தார்த் மகாதேவன் 41, பாலச்சந்தர் அனிருத் 37, அத்துக் உர் ரஹ்மான் 25 ரன்கள் சேர்த்தனர்.