தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் கட்டாயமாக கிராமங்களில் பணியாற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றம்

சீரான கொள்கையை உருவாக்க பரிந்துரை
தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் கட்டாயமாக கிராமங்களில் பணியாற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: கர்​நாடக மாநிலத்​தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் தனி​யார் அல்​லது நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகங்​களில் தனி​யார் ஒதுக்​கீட்டு இடங்​களின் கீழ் பயிலும் மருத்​துவ மாணவர்​களும் ஓராண்டு காலத்​துக்கு கிராமப்​புறங்​களில் பணி​யாற்​றி​னால் மட்டுமே மருத்​து​வ​ராக பதிவு செய்ய முடி​யும் என்ற அரசாணை கர்​நாடக அரசால் வெளி​யிடப்​பட்​டது.

இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பி.எஸ்​.நரசிம்​மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, கிராமப்​புறங்​களில் பணி​யாற்​று​வ​திலிருந்து தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​களுக்கு ஏன் விலக்​களிக்​கப்பட வேண்​டும்? என கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதிலளித்த மனு​தா​ரர்​கள் தரப்​பு, தனி​யார் ஒதுக்​கீட்டு இடங்​களின் கீழ் சேர்ந்து மிக அதி​கக் கட்​ட​ணம் செலுத்தி மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்​கள், அரசி​யல் சாசனத்​தின் 14-வது பிரி​வின் கீழ் சேர்க்​காமல் “தெளி​வாக வேறு​படுத்​திக் காணக்​கூடிய ஒரு தனிப்​பிரி​வாக” கருதப்பட வேண்​டும் என்​றும், அவர்​களை கிராமப்​புறங்​களில் கட்​டாயப் பணி செய்ய வேண்டுமென்ற நிபந்​தனைக்கு உட்​படுத்​தப்​படக் கூடாது எனவும் தெரிவிக்​கப்​பட்​டது.

ஆனால் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், கிராமப்புறங்களில் மருத்​துவ மாணவர்​கள் பணி​யாற்​று​வதை கட்டாய​மாக்க தேசிய அளவில் ஒரு சீரான கொள்கை இருக்க வேண்​டும் என்று தெரி​வித்​தனர்.

அப்​போது மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா, நாடு தழு​விய இத்​தகைய கொள்​கையை வகுப்​பது தொடர்​பாக மத்​திய அரசிட​மிருந்து உரிய அறி​வுறுத்​தல்​களைப் பெற்​றுத் தெரி​விப்​ப​தாக கூறி​னார்.

இதனைத் தொடர்ந்து நீதிப​தி​கள், மருத்​துவ மாணவர்​கள் கிராமப்​புறங்​களில் பணி​யாற்​று​வதை கட்​டாய​மாக்​கும் வகை​யில் தேசிய அளவி​லான சீரான கொள்​கையை வகுப்​பது குறித்து 3 வாரத்​தில் மத்​திய அரசு பதிலளிக்​க வேண்​டும்​ என உத்​தர​விட்​டு வழக்​கை தள்​ளி வைத்​தனர்​.

தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் கட்டாயமாக கிராமங்களில் பணியாற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றம்
கேம்பெல் தாம்சன் அபார பந்து வீச்சு: 54 ரன்களுக்கு சுருண்டு வங்கதேசம் படுதோல்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in