சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெற்றார் லயோனல் மெஸ்ஸி

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெற்றார் லயோனல் மெஸ்ஸி
Updated on: 
2 min read

பியூனஸ் அயர்ஸ்: பிஃபா உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யில் கடந்த ஜூலை மாதம் ஸ்பெ​யினிடம் தோல்​வியடைந்த சில வாரங்​களுக்​குப் பிறகு சர்​வ​தேச கால்​பந்​தில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக மெஸ்ஸி அறி​வித்​திருந்​தார். ஆனால், மெஸ்​ஸிக்கு உரிய பிரி​யா​விடையை வழங்​கு​வதற்​காக அர்​ஜெண்​டினா கால்​பந்து சங்​கம் அவரை மீண்​டும் ஒரு போட்​டி​யில் விளை​யாட அழைத்​தது. இதை மெஸ்ஸி ஏற்​றுக்​கொண்​டிருந்​தார்.

இதன்​படி அர்​ஜெண்​டி​னா​வின் பியூனஸ் அயர்​ஸில் உள்ள எஸ்​டாடியோ மோனு​மென்​டல் மைதானத்​தில் நேற்று முன்​தினம் இரவு அர்​ஜெண்​டினா - பெனின் கால்​பந்து அணி​கள் நட்​புரீ​தியி​லான போட்​டி​யில் மோதின. இந்த ஆட்​டம் ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்​ஸிக்கு பிரியா விடை கொடுக்​கும் போட்​டி​யாக அமைந்​தது. இந்த போட்​டி​யில் அர்​ஜெண்​டினா 3-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

ஆட்​டத்​தின் 71-வது நிமிடத்​தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இடது காலால் அபார​மாக கோலாக மாற்றி அசத்​தி​னார் 39 வயதான லயோனல் மெஸ்​ஸி. அவர், கோல் அடித்​ததும் மைதானத்​தில் திரண்​டிருந்த 85 ஆயிரம் ரசிகர்​களும் அரங்​கமே அதிர மெஸ்​ஸி, மெஸ்ஸி என முழக்​கமிட்​டனர். தொடர்ந்து 2 கோல்​கள் அடிக்க மெஸ்ஸி உதவி​யும் செய்​திருந்​தார்.

21 ஆண்​டு​களாக அர்​ஜெண்​டினா அணிக்​காக விளை​யாடிய மெஸ்​ஸி, 2 கோபா அமெரிக்கா பட்​டங்​கள் மற்​றும் ஓர் உலகக் கோப்​பையை வென்ற நிலை​யில் தனது சர்​வ​தேச பயணத்தை நிறைவு செய்​துள்​ளார். அர்​ஜெண்​டினா அணிக்​காக 208 போட்​டிகளில் விளை​யாடி 126 கோல்​கள் அடித்​துள்​ளார்.

போட்டி முடிந்​ததும் ரசிகர்​களிடம் லயோனல் மெஸ்​ஸி, ரசிகர்​கள் மத்​தி​யில் பேசும் போது, “அர்​ஜெண்​டினா அணிக்​காக விளை​யாடு​வது ஒரு​வருக்கு கிடைக்​கக்​கூடிய மிக அழகான விஷ​யம். உண்​மை​யிலேயே இதை​விட அழகானது எது​வும் இல்​லை. தவிர்க்க முடி​யாமல் எனது கால்​பந்து வாழ்க்​கை​யின் மிக​வும் சோக​மான நாளை எதிர்​கொள்​கிறேன். தேசிய அணிக்கு விடை கொடுக்க வேண்​டிய நாள் இது. உங்​கள் அனை​வரிட​மும் இருந்து விடை​பெறுகிறேன்.

உங்​களை நான் மிக​வும் தவற​விடு​வேன். தேசிய அணி​யின் சீருடையை அணிந்து விளை​யாடு​வதை​யும் தவற​விடு​வேன். ஆனால் இனிமேல் இந்த வீரர்​களுக்​கும், அவர்​களுக்​குப் பிறகு வரும் வீரர்​களுக்​கும் ஆதர​வாக உங்​களு​டன் நானும் இருப்​பேன். எப்​போதும் ஒன்​றாக இருப்​போம்” என்று உருக்​க​மாக தெரி​வித்​தார்.

போட்டி முடிந்​ததும் மோனு​மென்​டல் மைதானத்​தின் வானில் ட்ரோன் கண்​காட்சி நடை​பெற்​றது. மெஸ்​ஸி​யின் கால்​பந்து வாழ்க்​கை​யின் முக்​கிய தருணங்​கள் வானில் ஒளிர்ந்​தன. குறிப்​பாக 2022-ம் ஆண்டு கத்​தா​ரில் உலகக் கோப்​பையை வென்​ற​போது மெஸ்ஸி கோப்​பையைத் தூக்கி நிற்​கும் காட்​சி​யும் இடம்​பெற்​றது.

போட்​டிக்​காக பேருந்​தில் பயணம் செய்து வந்த போதும், பின்​னர் அர்​ஜென்​டினா தேசிய கீதம் இசைக்​கப்​பட்​ட​போதும் மெஸ்ஸி மற்​றும் தலைமை பயிற்​சி​யாளர் லியோனல் ஸ்கலோனி ஆகியோர் கண்​ணீர் சிந்​தினர். மெஸ்​ஸி​யுடன் அவரது மகன்​கள் தியாகோ, மேடியோ மற்​றும் சிரோ ஆகியோ​ரும் மைதானத்​தில் இருந்​தனர்.

1978, 1986 மற்​றும் 2022 உலகக் கோப்​பைகளை வென்ற அர்​ஜெண்​டினா அணி​களின் வீரர்​களும் அவர்​களது குடும்​பத்​தினரும்​ மெஸ்​ஸிக்​கான பிரி​யா​விடை நிகழ்ச்​சி​யில்​ பங்​கேற்​றனர்​.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெற்றார் லயோனல் மெஸ்ஸி
ஆசிரமத்தை பிரபலப்படுத்த ரூ.5 கோடி பெற்றாரா கோலி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in