இலங்கை கிரிக்​கெட் வாரிய உறுப்பினர் குழு​வில் குமார சங்ககாராவுக்கு இடம்

இலங்கை கிரிக்​கெட் வாரிய உறுப்பினர் குழு​வில் குமார சங்ககாராவுக்கு இடம்
Updated on
1 min read

கொழும்பு: இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு புதி​தாக நியமிக்கப்​பட்ட 9 பேர் கொண்ட உறுப்​பினர் குழு​வில் அணி​யின் முன்​னாள் வீரர்​கள் குமார சங்ககாரா, ரோஷன் மகா​நாமா ஆகியோரது பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​தின் தலை​வ​ராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்​தவர் ஷம்மி சில்​வா. இந்​நிலையில் வீரர்​களிட​மிருந்து வந்த புகார்​கள் மற்​றும் சர்​வ​தேச அரங்​கில் இலங்கை அணி​யின் மோச​மான செயல்​பாடு​களைத் தொடர்ந்​து, மார்ச் மாத தொடக்கத்​தில் இருந்தே சில்​வாவை பதவியி​லிருந்து நீக்​கும் நடவடிக்​கையை இலங்கை அரசு பரிசீலித்து வந்​தது.

இந்​நிலை​யில் 3 நாட்​களுக்கு முன்பு நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தின் முடி​வில் இலங்கை கிரிக்​கெட் வாரி​யத் தலை​வர், உறுப்​பினர்​கள் அனை​வரும் பதவியி​லிருந்து ஒட்​டுமொத்​த​மாக வில​கு​வ​தாக அறி​வித்​தனர். இந்​நிலை​யில் இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு புதிய நிர்​வாகி​கள் தேர்ந்​தெடுக்​கப்​படும் வரை வாரி​யத்​தின் பணி​களை மேற்​கொள்ள 9 பேர் கொண்ட குழுவை இலங்கை அரசு நேற்று அறி​வித்​துள்​ளது.

இதில் இரான் விக்​ரமரத்​னே, குமார சங்ககாரா, ரோஷன் மகாநாமா, சிதாத் வெட்​டி​முனி, பிர​காஷ் ஷிகாப்​டர், அவந்தி கொலம்​பாகே, துஷிராரா டெல்​லா, உபுல் குமாரபெரு​மா, தினால் பிலிப்ஸ் ஆகிய 9 பேர் இடம்​பெற்​றுள்​ளனர். இலங்கை கிரிக்​கெட் வாரி​யம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் இத்​தகவல் தெரிவிக்கப்​பட்​டுள்​ளது.

இலங்கை கிரிக்​கெட் வாரிய உறுப்பினர் குழு​வில் குமார சங்ககாராவுக்கு இடம்
திமுக ‘கூட்டணி’ ஆட்சியா? - கருத்துக் கணிப்பு முடிவுகள் மீதான விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in