ஆறுதல் வெற்றியா, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பா என்ற குழப்பத்தில் கொல்கத்தா - டெல்லி இன்று பலப்பரீட்சை

ஆறுதல் வெற்றியா, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பா என்ற குழப்பத்தில் கொல்கத்தா - டெல்லி இன்று பலப்பரீட்சை
Updated on
2 min read

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்​துடன் லீக் சுற்று நிறைவடைகிறது.

அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 13 புள்​ளி​களு​டன் 6-வது இடத்​தி​லும், அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 12 புள்​ளி​களு​டன் 8-வது இடத்​தி​லும் உள்​ளன. இந்த இரு அணி​களும் பிளே-ஆஃப் சுற்றின் கடைசி இடத்​திற்​கான பந்​த​யத்​தில் கணித ரீதி​யாக இன்னும் வாய்ப்​பில் நீடிக்​கின்​றன.

இருப்​பினும் இந்த போட்டி தொடங்​கு​வதற்கு முன்​பாகவே அது ஒரு முக்​கி​யத்​து​வ​மற்ற போட்​டி​யாக மாறு​வதற்​கும் அதிக வாய்ப்​பு​கள் உள்​ளன. ஏனெனில் இன்று பிற்​பகல் மும்​பை​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 14 புள்​ளி​களு​டன் உள்ள ராஜஸ்​தான் அணி, மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி வெற்றி பெற்​றால் 16 புள்​ளி​களு​டன் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்​றில் நுழைந்​து​விடும்.

இது நிகழ்ந்​தால் கொல்​கத்தா - டெல்லி அணி​கள் இடையி​லான ஆட்​டத்​தின் முடிவு யாருக்​குமே பலன் இல்​லாமல் போகும். ராஜஸ்​தான் அணி தோல்வி அடைந்​தால் மட்​டுமே கொல்​கத்தா அணிக்கு வாய்ப்பு கிடைக்​கும். அதி​லும் கொல்​கத்தா அணி டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை வென்​றாக வேண்​டும். கொல்​கத்தா அணி வெற்றி பெற்​றால் அதி​கபட்​ச​மாக 15 புள்​ளி​களு​டன் லீக் சுற்றை நிறைவு செய்​யும்.

இது நிகழ்ந்​தா​லும் பஞ்​சாப் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் வெற்றி கண்​டால் அந்த அணி​யும் 15 புள்​ளி​களை பெறும். இந்த சூழ்​நிலை உரு​வா​னால் நிகர ரன் விகிதம் கணக்​கில் எடுத்​துக்​கொள்​ளப்​படும். இது ஒரு​புறம் இருக்க பஞ்​சாப், ராஜஸ்​தான் அணி​கள் தங்​களது கடைசி ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தால் மட்​டுமே டெல்லி அணிக்கு வாய்ப்பு கிடைக்​கும். இது நிகழ்ந்​தால் டெல்லி அணி தனது கடைசி ஆட்​டத்​தில் கொல்​கத்​தாவை அதிக ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்த வேண்​டும். இதன் வாயி​லாக டெல்லி அணி 14 புள்​ளி​களை பெறும்.

அந்த சூழ்​நிலை​யில் ராஜஸ்​தான் அணி 14 புள்​ளி​களு​டன் இருக்​கும். தற்​போது அந்த அணி​யின் நிகர ரன் விகிதம் 0.083 ஆக இருக்​கிறது. டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யின் நிகர ரன் விகிதம் -0.871 ஆக உள்​ளது. இதனால் டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெறு​வது என்​பது கடினம் என்றே பார்க்​கப்​படு​கிறது.

தங்​களின் கட்​டுப்​பாட்​டில் இல்​லாத பலவித​மான புள்​ளி​விவரக் கணக்​கு​களை யோசித்​துக் கொண்​டிருப்​பதை விட, இரு அணி​களும் தகுதி பெறும் வாய்ப்​பு​களைப் பற்றி அதி​கம் கவலைப்​ப​டா​மல், தொடரை வலு​வான வெற்​றியோடு நிறைவு செய்​வ​தில் அதிக கவனம் செலுத்த வாய்ப்​புள்​ளது.

கொல்​கத்தா அணி இந்த சீசனின் தொடக்​கத்​திலேயே முன்​னணி பந்து வீச்​சாளர்​களின் காயங்​கள் மற்​றும் சில முக்​கிய வீரர்​கள் விளை​யாட முடி​யாத சூழ்​நிலை காரண​மாகப் பெரு​மள​வில் பாதிக்​கப்​பட்​டது. முஸ்​டாபிஸுர் ரஹ்​மான், ஹர்​ஷித் ராணா, ஆகாஷ் தீப், மதீஷா பதிரணா ஆகிய அனை​வரும் பல்​வேறு காரணங்​களால் விளை​யாட முடி​யாமல் போனது. அதே நேரத்​தில், பெரும் தொகைக்கு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டு, காயத்​தில் இருந்து மீண்டு வந்த நட்​சத்​திர வீரர் கேமரூன் கிரீ​னாலும் தொடக்​கக் கட்​டப் போட்​டிகளில் பந்​து​வீச முடிய​வில்​லை.

இருப்​பினும் கொல்​கத்தா அணி தங்​களின் கடைசி ஏழு போட்​டிகளில் 6-ல் வெற்றி பெற்று பிளே-ஆஃப் வாய்ப்​பைத் தக்​க​வைத்​துக் கொண்​டது. தற்​போது முக்​கிய​மான கட்​டத்​தில் முன்​னணி பேட்​ஸ்​மே​னான அங்​ரிஷ் ரகு​வன்ஷி காயம் காரண​மாக விலகி உள்​ளார். நடப்பு தொடரில் அவர், 5 அரை சதங்​களு​டன் 422 ரன்​கள் குவித்​திருந்​தார்.

டெல்லி கேப்​பிட்​டல்ஸ் அணி​யைப் பொறுத்​தவரை அவர்​களின் பேட்​டிங் பெரு​மள​வில் கே.எல். ராகுலையே சார்ந்​துள்​ளது. அவர், இந்த சீசனில் 13 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு சதம், 4 அரைசதங்​கள் உட்பட 171-க்​கும் அதி​க​மான ஸ்டிரைக் ரேட்​டுடன் 533 ரன்​கள் குவித்​துள்​ளார். கே.எல்​.​ராகுல் ஒரு வலு​வான தொடக்​கத்​தைத் தராத பெரும்​பாலான போட்​டிகளில், டெல்லி கேப்​பிட்​டல்ஸ் அணி தடு​மாறி உள்​ளது.

டெல்லி அணி​யின் பந்​து​வீச்​சிலும் நிலை​யானத் தன்மை இல்​லாமல் உள்​ளது. வேகப்​பந்து வீச்​சாளர்​கள் ரன்​களைக் கட்​டுப்​படுத்த திணறி வரும் வேளை​யில், கேப்​டன் அக்​சர் படேல், குல்​தீப் யாதவ் ஆகியோர் சுழற்​பந்து வீச்​சில் பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​தத் தவறி​விட்​டனர். அக்​சர் படேல் 10 விக்​கெட்​டு​களை மட்​டுமே வீழ்த்​தி​யுள்​ளார், அதே நேரத்​தில் குல்​தீப் யாதவ் 7 விக்​கெட்​டு​களை மட்​டுமே கைப்​பற்​றி​யுள்​ளார்.

தங்​களது சீசன் சீரான​தாக இல்​லாத​போ​தி​லும், டெல்லி கேப்​பிட்​டல்ஸ் அணி பஞ்​சாப் கிங்ஸ் மற்​றும் ராஜஸ்​தான் ராயல்​ஸ் ஆகிய அணி​களுக்கு எதி​ராகப் பெற்ற அடுத்​தடுத்த இரண்டு வெற்​றிகளின் நம்​பிக்​கையோடு இப்​போட்​டி​யில் களம் இறங்​கு​கிறது. இரு அணி​களுக்​கும் இழப்​ப​தற்கு எது​வும் இல்லை என்​ப​தால், வெற்​றிக்​காக தங்​களின்​ முழு பலத்​தை​யும்​ பிரயோகிப்​பார்​கள்​ என்​று எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

ஆறுதல் வெற்றியா, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பா என்ற குழப்பத்தில் கொல்கத்தா - டெல்லி இன்று பலப்பரீட்சை
நீட் தேர்வு விண்ணப்ப தொகை திரும்பப் பெற வங்கிக் கணக்குகளை மே 27 வரை பதிவேற்றலாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in