

கொல்கத்தா: ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
கொல்கத்தா அணியிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஏற்கெனவே காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இந்நிலையில், நேற்று மற்றொரு வேகப்பந்து வீச்சாளரஹான ஆகாஷ் தீப்பும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.