ஹிமந்த சர்மா, மனைவிக்கு ரூ.35 கோடி சொத்து: அசாம் தேர்தல்

ஹிமந்த சர்மா, மனைவிக்கு ரூ.35 கோடி சொத்து: அசாம் தேர்தல்
Updated on
1 min read

குவாஹாட்டி: அ​சாம் சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்பு மனு தாக்​கல் நாளை​யுடன் முடிவடைகிறது. அங்கு மொத்​தம் 126 தொகு​தி​கள் உள்​ளன.

இதில் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா (57), சபா​நாயகர் விஸ்​வஜித் டெய்​மரி, எதிர்க்​கட்​சித் தலை​வர் தேவ்​விரத சைகியா உட்பட மொத்​தம் 109 பேர் கடந்த வெள்​ளிக்​கிழமை வேட்பு மனு தாக்​கல் செய்​தனர். அதற்கு முன்பு 7 பேர் என இது​வரை மொத்​தம் 116 பேர் மனு தாக்​கல் செய்​துள்​ளனர்.

ஜலுக்​பரி தொகு​தி​யில் பாஜக சார்​பில் வேட்பு மனு தாக்​கல் செய்​துள்ள முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, தனக்​கும் தனது மனைவி ரினிகு புயான் சர்​மாவுக்​கும் ரூ.35 கோடி மதிப்​பிலான சொத்து இருப்​ப​தாக பிர​மாணப் பத்​திரத்​தில் குறிப்​பிட்​டுள்​ளார்.

இதில் தனக்கு ரூ.2.36 கோடி மதிப்​பிலான அசை​யும் சொத்து மட்​டுமே இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார். கடந்த 2021 தேர்​தலின் போது தனக்கு ரூ.1.72 கோடி மதிப்​பிலான சொத்து இருப்​ப​தாக தெரி​வித்​திருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

இது​போல பிரைடு ஈஸ்ட் என்​டர்​டெ​யின்​மென்ட் என்ற ஊடக நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குந​ராக உள்ள தனது மனைவி ரினிகு புயானுக்கு ரூ.13.54 கோடி அசை​யும் சொத்​தும் ரூ.19.25 கோடி அசையா சொத்​தும் இருப்​ப​தாக ஹிமந்த சர்மா தெரி​வித்​துள்​ளார். மேலும் தனக்கு ரூ.95 லட்​ச​மும் தனது மனை​விக்கு ரூ.15.91 கோடி​யும் கடன் இருப்​ப​தாக​ அவர் தெரி​வித்​துள்​ளார்.

ஹிமந்த சர்மா, மனைவிக்கு ரூ.35 கோடி சொத்து: அசாம் தேர்தல்
ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in