ரஞ்சி கோப்பை இறுதி: 477 ரன் முன்னிலை பெற்றது ஜம்மு & காஷ்மீர் அணி

கோப்பையை வென்று வரலாறு படைக்கிறது
ரஞ்சி கோப்பை இறுதி: 477 ரன் முன்னிலை பெற்றது ஜம்மு & காஷ்மீர் அணி
Updated on
1 min read

ஹூப்ளி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் இறு​திப் போட்​டி​யில் கர்​நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் கர்​நாடக மாநிலம் ஹூப்​ளி​யில் விளை​யாடி வரு​கின்​றன. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஜம்மு & காஷ்மீர் அணி 584 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக ஷுபம் பண்​டிர் 121, சஹில் லாட்ரா 72, கேப்டன் பராஸ் டோக்ரா 70, கன்​ஹையா வாதவன் 70, அப்துல் சமத் 61 ரன்​கள் சேர்த்​தனர். இதையடுத்து பேட் செய்த கர்​நாடகா அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 69 ஓவர்​களில் 5 விக்​கெட்கள் இழப்புக்கு 220 ரன்​கள் எடுத்தது. மயங்க் அகர்​வால் 130, கிருத்​திக் கிருஷ்ணா 27 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய கர்​நா​டக அணி 93.3 ஓவர்​களில் 293 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது. மயங்க் அகர்​வால் 160, கிருத்​திக் கிருஷ்ணா 36, வித்​யாதர் பாட்​டீல் 11, ஷிகர் ஷெட்டி 0, பிரசித் கிருஷ்ணா 4 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.

ஜம்மு & காஷ்மீர் அணி சார்​பில் அகிப் நபி 5 விக்கெட்களை வீழ்த்​தி​னார். சுனில் குமார், யுத்​விர் சிங் ஆகியோர் தலா 2 விக்​கெட் கைப்​பற்​றினர். 291 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 57 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 186 ரன்​கள் எடுத்​தது.

கம்​ரான் இக்​பால் 160 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 11 பவுண்டரிகளு​டன் 94 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய சஹில் லாட்ரா 16 ரன்​கள் எடுத்​திருந்​தார். முன்​ன​தாக யாவர் ஹாசன் 1, ஷுபம் பண்​டிர் 4, கேப்​டன் பராஸ் டோக்ரா 16, அப்​துல் சமத் 32 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.

கைவசம் 6 விக்​கெட்​கள் இருக்க 477 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள ஜம்மு & காஷ்மீர் அணி இன்று கடைசி நாள் ஆட்​டத்தை எதிர்​கொள்​கிறது. இந்த போட்டி டிரா​விலேயே முடி​யும். முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​றதன் அடிப்​படை​யில் ஜம்மு & காஷ்மீர் அணி வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​படும். இதன் மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன் முறை​யாக கோப்பை வென்று வரலாற்று சாதனை படைக்க ஜம்​மு & காஷ்மீர்​ அணி காத்திருக்​கிறது.

ரஞ்சி கோப்பை இறுதி: 477 ரன் முன்னிலை பெற்றது ஜம்மு & காஷ்மீர் அணி
வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க புது உத்திகள்: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in