பெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 13-வது சீசன் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - எஸ்சி டெல்லி அணிகள் மோதின.
பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் போர்ஜா 2 கோல்களும் (22, 75-வது நிமிடங்கள்), மென்னோ ஒரு கோலும் (89-வது நிமிடம்) அடித்தனர்.
கோவாவில் நடைபெற்ற ஆட்டத்தில் எப்ஃப்சி கோவா - சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.