யூடியூபர் துருவ் ராத்தி கைது

யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி

Updated on: 
1 min read

குருகிராம்: சிஜேபி சார்பில் நேற்று டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் ஜந்தர் மந்தர் மைதானம் மற்றும் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்த புறப்பட்டுக் கொண்டிருந்த பிரபல யூடியூபர் துருவ் ராத்தியை போலீஸார் ஹரியானா மாநிலம் குருகிராமிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “டெல்லி போலீஸ் படை ஹரியானா மாநிலம் குருகிராமிலுள்ள துருவ் ராத்தி வீட்டுக்கு வந்து அவரைக் கைது செய்துள்ளனர். டெல்லி போலீஸ் படையுடன் குருகிராம் போலீஸாரும் உடன் சென்று துருவ் ராத்தியைப் பிடிப்பதற்கு உதவினர். போலீஸாருக்கு ஒத்துழைக்காததால் அவரைக் கைது செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது” என்றார்.

<div class="paragraphs"><p>யூடியூபர் துருவ் ராத்தி</p></div>
சிஜேபி போராட்டத்தை வழிநடத்த உள்ள அஜிங்கிய ஷிண்டே யார்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in