நியூஸிலாந்​துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​: ஆகாஷ் தீப் விலகல்

ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா

ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா

Updated on: 
1 min read

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்​துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய வேகப்​பந்து வீச்​சாளர் ஆகாஷ் தீப் மூளை​யதிர்ச்சி காரண​மாக ஆட்​டத்​தி​லிருந்து வில​கி​யுள்​ளார்.

இந்​தப் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​டுகளைக் கைப்​பற்​றிய ஆகாஷ் தீப், பேட்​டிங்​கில் 29 ரன்​கள் சேர்த்​தார். நேற்​றைய 3-வது நாள் ஆட்​டத்​தில் ஆகாஷ் தீப் பேட்​டிங் செய்த போது ஜேக்​கப் டஃபி, கைல் ஜேமிசன் ஆகியோர் வீசிய பந்​துகள் அவரது ஹெல்​மெட்​டில் அடுத்​தடுத்து தாக்​கின.

இதையடுத்து அவருக்கு மூளை​யதிர்ச்சி ஏற்​பட்​டது மருத்​து​வப் பரிசோதனை​யில் உறுதி செய்​யப்​பட்​ட​தால், எஞ்​சிய ஆட்​டத்​தி​லிருந்து வில​கினார். அவருக்​குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்​கப்​பட்​டார்.

<div class="paragraphs"><p>ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா</p></div>
மிட்செல் மார்ஷ் சதம் வீண்: 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

X