மிட்செல் மார்ஷ் சதம் வீண்: 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

மிட்செல் மார்ஷ் சதம் வீண்: 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி
Updated on: 
2 min read

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதன் வாயி​லாக 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 தொடரை இங்​கிலாந்து அணி 3-1 என தன்​வசப்​படுத்​தி​யது.

சிட்​னி​யில் நேற்று நடை​பெற்ற 4-வது ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 181 ரன்​கள் குவித்​தது. டாப் ஆர்​டர் பேட்​ஸ்​மேன்​களான பில் சால்ட் 7, அனியூரின் டொனால்டு 7, கேப்​டன் ஹாரி புரூக் 9, டாம் பேன்​டன் 3, ஜோர்​டான் காக்ஸ் 23 ரன்​களில் நடையை கட்​டினர்.

பொறுமையாக விளை​யாடிய ஜேம்ஸ் கோல்ஸ் 29 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 33 ரன்​களில் வெளியேறினார். இறுதிக்​கட்ட ஓவர்​களில் சேம் கரண் அதிரடி​யாக விளை​யாடி 28 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​களும், ஜேமி ஓவர்​டன் 9 பந்​துகளில், 3 சிக்​ஸர்​களு​டன் 20 ரன்​களும், லியாம் டாவ்​சன் 14 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 23 ரன்​களும் விளாசினர்.

ஆஸ்திரேலிய அணி தரப்​பில் ஸ்​பென்​சன் ஜான்​சன், ரிலே மெரி​டித் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 182 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளி​யில் விக்​கெட்​களை இழந்​தது. எனினும் கேப்​டன் மிட்​செல் மார்ஷ் அதிரடி​யாக விளை​யாடி சதம் அடித்து வெற்​றிக்​காக போராடினார். 19 ஓவர்​களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 170 ரன்​கள் எடுத்​தது.

ஹென்றி குரோகோம்ப் வீசிய கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி​யின் வெற்​றிக்கு 12 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. முதல் 3 பந்​துகளி​லும் தலா ஒரு ரன்​கள் மட்​டுமே சேர்க்​கப்​பட்ட நிலை​யில் 4-வது பந்​தில் மிட்​செல் மார்ஷ் ஆட்​ட​மிழந்​தார். அவர் 57 பந்​துகளை எதிர்​கொண்டு 9 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 119 ரன்​கள் விளாசினார்.

5-வது பந்​தில் ஜோயல் டேவிஸ், ரன் ஏதும் எடுக்​காமல் எல்​பிடபிள்யூ ஆனார். கடைசி பந்​தில் ஆடம் ஸம்பா ஒரு ரன் மட்​டுமே சேர்த்​தார். முடி​வில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 174 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது.

இங்​கிலாந்து அணி தரப்​பில் ஹென்றி குரோகோம்ப் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினார். 7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இங்​கிலாந்து அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரை 3-1 என கைப்​பற்​றியது. முதல் போட்​டி​யில் ஆஸ்திரேலிய அணி 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​திலும், 3-வது ஆட்​டத்​தில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​திலும் இங்​கிலாந்து அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்​திருந்​தது.

மிட்செல் மார்ஷ் சதம் வீண்: 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் நியூஸிலாந்து அணி

X