

லா பிளாக்னே: பிரான்ஸ் நாட்டின் லா பிளாக்னே நகரில் 6-வது பிளாக்னே ஓபன் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்றது. 20 நாடுகளைச் சேர்ந்த 142 வீரர்கள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பா.இனியன் 9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
23 வயதான பா.இனியன் இந்தத் தொடரில் ஒரு சுற்றில்கூட தோல்வியை சந்திக்கவில்லை. அவர், 6 வெற்றிகளையும், 3 டிராக்களையும் பதிவு செய்தார். இந்த ஆண்டில் பா.இனியன் வெல்லும் 4-வது பட்டம் இதுவாகும்.