சாம்பியன் பட்டம் வென்றார் இனியன்

சாம்பியன் பட்டம் வென்றார் இனியன்
Updated on
1 min read

மும்பை: குளோபல் செஸ் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பா.இனியன் சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று நடைபெற்ற கடைசி சுற்றில் இனியன், அஜய் சுந்தோஷ் பர்வதரெட்டியுடன் மோதினார்.

இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ஒட்டுமொத்தமாக 7.5 புள்ளிகளை குவித்த இனியன் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு கோப்பையுடன் ரூ.8 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

சாம்பியன் பட்டம் வென்றார் இனியன்
சென்னையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in