சென்னையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி

சென்னையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி
Updated on
1 min read

சென்னை: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. தரம்சலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 170 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

இந்நிலையில் இரு அணிகளும் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.

சென்னையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி
ஜோனாதன் டேவிட் ஹாட்ரிக் கோல் - கனடா அணிக்கு வரலாற்று வெற்றி | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in