2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி - இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் அசத்தல்

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 4 ரன் வித்தியாசத்தில் நியூஸி.யை வீழ்த்தியது
நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார்.

நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார்.

Updated on: 
2 min read

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்​கெட் போட்டி மழையால் பாதிக்​கப்​பட்ட நிலை​யில் டக்​வொர்த் லீவிஸ் விதிப்​படி இந்திய அணி 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

வெலிங்​டனில் உள்ள ஹென்றி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டம் மழை மற்​றும் மைதான ஈரப்​ப​தம் காரண​மாக 47 ஓவர்​களை கொண்​ட​தாக நடத்​தப்​பட்​டது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 41 ஓவர்​களில் 134 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக டேரில் மிட்​செல் 104 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​களும், கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் 38 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரியுடன் 31 ரன்​களும் எடுத்​தனர்.

வில் யங் 6, டிம் ஷெய்​பர்ட் 0, ஹென்றி நிக்​கோல்ஸ் 11, டாம் லேதம் 7, கிளென் பிலிப்ஸ் 0, நேதன் ஸ்​மித் 3, கைல் ஜேமிசன் 7, பிளேர் டிக்​னர் 2 ரன்​களில் நடையை கட்​டினர்.

இந்​திய அணி தரப்​பில் குர்​னூர் பிரார் 10 ஓவர்​களை வீசி 2 மெய்​டன்​களு​டன் 30 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தினார். அகிப் நபி, அன்​ஷுல் கம்​போஜ், அக்​சர் படேல் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

அர்​ஷ்​தீப் சிங் 7 ஓவர்​களை வீசி ஒரு மெய்​டனுடன் 16 ரன்​களை மட்​டுமே வழங்​கிய நிலை​யில் விக்​கெட் ஏதும் கைப்​பற்​றவில்லை.

இந்​திய அணி​யின் பந்​து​வீச்​சாளர்​கள் ஒட்​டுமொத்​த​மாக 176 ‘டாட் பால்​களை’ வீசி அசத்​தி​யிருந்​தனர். இதையடுத்து 135 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி​யும் சீரான இடைவெளி​யில் விக்​கெட்​களை இழந்து நெருக்​கடியை சந்​தித்​தது.

கேப்​டன் ஷுப்​மன் கில் 0, விராட் கோலி 7 ரன்​களில் நடையை கட்​டினர். அதிரடி​யாக விளை​யாடிய ரோஹித் சர்மா 28 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 23 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்​கிய அக்​சர் படேல் 7 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார்.

47 ரன்​களுக்கு 4 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய கே.எல்.ராகுல் நிதானமாக விளை​யாடினார். மறுமுறை​யில் சீராக ரன்​கள் சேர்த்த ஸ்ரேயஸ் ஐயர் 45 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார். இதன் பின்​னர் நமன்​திர் 12, அன்​ஷுல் கம்​போஜ் ஒரு ரன்​னில் வெளியேறினர்.

இந்​திய அணி 26 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 113 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை காரண​மாக ஆட்​டம் தடைபட்​டது.

கேஎல்.ராகுல் 38 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​களும், அகிப் நபி ஒரு ரன்​னும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்.

மழை நின்ற பின்​னர் டக்​வொர்த் லீவிஸ் விதிப்​படி இந்​திய அணி 37 ஓவர்​களில் 133 ரன்​கள் எடுக்க வேண்​டும் என இலக்கு மாற்றி அமைக்​கப்​பட்​டது. ஆனால் போட்டி மீண்​டும் தொடங்​கு​வதற்கு முன்​னதாக மீண்​டும் மழை பெய்தது.

இத​னால் ஆட்​டத்தை தொடர்ந்து நடத்த முடி​யாத சூழ்​நிலை ஏற்​பட்​டது. இத​னால் வெற்​றியை தீர்​மானிக்க டக்​வொர்த் லீவிஸ் விதி முறை கடைப்பி​டிக்​கப்​பட்​டது. இதில் இந்​திய அணி 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றதாக அறி​விக்​கப்​பட்​டது.

நியூஸிலாந்து அணி சார்​பில் கைல் ஜேமிசன், ஜேக்​கப் டஃபி ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். ஆட்ட நாயக​னாக இந்​திய வீரர் குர்​னூர் பிரார் தேர்​வானார். 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் 2-0 என முன்​னிலை வகிக்​கிறது.

ஆக்​லாந்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 3-வது போட்டி வரும் 10-ம் தேதி ஹாமில்​டன் நகரில் உள்ள செடன்​பார்க் மைதானத்​தில் நடை​பெறுகிறது.

<div class="paragraphs"><p>நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார்.</p></div>
துணிச்சல் இருந்தால் என் மீது புல்டோசர் ஏற்றுங்கள்: பாஜகவுக்கு மம்தா பானர்ஜி சவால்

X