இந்​திய கபடி வீரரின் பதக்கம் பறிப்பு

இந்​திய கபடி வீரரின் பதக்கம் பறிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: சீனா​வின் சான்யா கடற்​கரை​யில் கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற 6-வது ஆசிய கடற்​கரை விளை​யாட்​டுப் போட்டிகளில் இந்​திய ஆடவர் கபடி அணி வெள்​ளிப் பதக்​கம் வென்​றிருந்​தது.

இந்த அணி​யில் இடம் பெற்​றிருந்த பிரிஜேந்​திர சிங் சவுத்ரி போட்டிக்கு இடையே நடத்​தப்​பட்ட சோதனை​யில் ஊக்​கமருந்து பயன்படுத்​தி​யது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து அவரது பதக்​கம் பறிக்​கப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச பரிசோதனை முகமை வெளி​யிட்​டுள்ள தகவலின்​படி, சவுத்ரி கடந்த ஏப்​ரல் 27 அன்று தடைசெய்​யப்​பட்ட பிரிஞ்​சோலாமைடு என்ற ஊக்​கமருந்தை உட்கொண்​டது சோதனை​யில் உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்​திய கபடி வீரரின் பதக்கம் பறிப்பு
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: 15 பேர் கொண்ட ஜப்பான் அணி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in