“ரெட் பால் கிரிக்கெட்டை நான் விரும்புகிறேன் என்றால் நம்ப மறுக்கின்றனர்” - இஷான் கிஷன்

“ரெட் பால் கிரிக்கெட்டை நான் விரும்புகிறேன் என்றால் நம்ப மறுக்கின்றனர்” - இஷான் கிஷன்
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவ வீரராக இருந்தவர் இஷான் கிஷன், குறிப்பாக ரிஷப் பண்ட் கனவிலும் அச்சுறுத்தும் சாலை விபத்தில் சிக்கிய போது இஷான் கிஷன் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்திருந்தார்.

கே.எஸ்.பரத் சிறப்பாக செயல்படாததால், 2023 ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளில் இஷான் டெஸ்ட் அறிமுகம் பெற்றார். ஆனால் அதன் பிறகு இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அவர் ஒதுக்கப்பட்டார்.

2026 தொடக்கத்தில் மீண்டும் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பிடித்த 28 வயதான இஷான், தற்போது டெஸ்ட் அணிக்குத் திரும்பும் இலக்குடன் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். துலீப் டிராபி காலிறுதியில் கிழக்கு மண்டல அணியை வழிநடத்திய அவர், வடகிழக்கு மண்டலத்திற்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

போட்டிக்குப் பிறகு பேசிய இஷான், “டெஸ்ட் கிரிக்கெட்டை நான் உண்மையிலேயே விரும்புகிறேன், இதை அனைவரும் நம்ப மறுக்கின்றனர். பந்துகள் ஸ்விங் ஆவது, எதிரணி வீரர்களின் சவால் மற்றும் களத்தில் நடைபெறும் வார்த்தைப் போட்டி ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டை தனித்துவமாக்குகிறது. மட்டையடிக்குச் சாதகமான ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது எளிதாகவும் கேளிக்கையாகவும் இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் நிலவும் போட்டி முற்றிலும் வித்தியாசமானது.

எனினும், வெள்ளைப் பந்து அணியில் தொடர்ந்து இடம்பெறுவதால் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வருகிறது. டெஸ்ட் அணிக்குத் திரும்புவதற்கு அதிக உழைப்பு தேவை , தற்போது துருவ் ஜூரெல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களுடன் போட்டி போடும் நிலையில் இருந்தாலும், அவர்கள் தோல்வியடைய வேண்டும் என்று நினைப்பது எனது எண்ணம் அல்ல; தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்வதே எனது பணி.” என்று இஷான் தெளிவுபடுத்தினார்.

“ரெட் பால் கிரிக்கெட்டை நான் விரும்புகிறேன் என்றால் நம்ப மறுக்கின்றனர்” - இஷான் கிஷன்
கைவிலங்குடன் பிரைடன் கார்ஸ்; தொடரும் மதுபோதை, நைட் கிளப் சம்பவங்கள்! - கடும் கோபத்தில் ஜோ ரூட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in