

ஆன்டாரியோ: கனடாவின் ஆன்டோரியோ நகரில் உலக ஸ்குவாஷ் ஜூனியர் அணிகள் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் அரை இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி 0-2 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது.
இந்திய அணி தரப்பில் முதல் ஆட்டத்தில் குர்வீர் சிங் 7-11, 12-10, 9-11, 7-11 என்ற செட் கணக்கில் பிரென்டன் டாக்லியாரினியிடம் தோல்வி அடைந்தார். அடுத்த ஆட்டத்தில், ஆர்யவீர் திவான் 5-11, 7-11, 5-11 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் யாசீன் ஷலாபிடம் வீழ்ந்தார்.