இறுதிப் போட்டியில் இந்திய அணி கால்பதித்தது எப்படி? | T20 WC Semi Final

இங்கிலாந்துக்கு எதிராக 253 ரன் குவித்த போதிலும் போராடி 7 ரன்களில் வெற்றி
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதியில் கடும் அச்சுறுத்தல் கொடுத்த ஜேக்கப் பெத்தேல் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனதை கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்.

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதியில் கடும் அச்சுறுத்தல் கொடுத்த ஜேக்கப் பெத்தேல் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனதை கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்.

Updated on
5 min read

மும்பை: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நேற்று மும்பை வான்​கடே மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, இங்​கிலாந்​துடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது. டாஸ் வென்ற இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் ஹாரி புரூக் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு சஞ்சு சாம்​சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய முதல் ஓவரில் சஞ்சு சாம்​சன் மிட்

ஆன் திசை​யில் பவுண்​டரி ஒன்​றை​யும், லெக் திசை​யில் சிக்​ஸர் ஒன்​றை​யும் பறக்​க​விட்​டார். முதல் ஓவரில் 12 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. வில் ஜேக்ஸ் வீசிய 2-வது ஓவரில் 2 பவுண்​டரி​களை விரட்​டிய அபிஷேக் சர்மா கடைசி பந்தை லெக் திசை​யில் தூக்கி அடித்த போது பில் சால்ட்​டிடம் கேட்ச் ஆனது.

7 பந்​துகளை சந்​தித்த அபிஷேக் சர்மா 2 பவுண்​டரி​களு​டன் 9 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து இஷான் கிஷன் களமிறங்​கி​னார். ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய சஞ்சு சாம்​சன், அடுத்த பந்தை மிட் ஆன் திசையை நோக்கி வலு​வாக அடித்​தார். அப்​போது அங்கு நின்ற ஹாரி புரூக் கேட்ச்சை தவற​விட்​டார். இதை சாம்​சன் பயன்​படுத்​திக் கொண்டு 4-வது பந்தை சிக்​ஸருக்​கும், கடைசி பந்தை பவுண்​டரிக்​கும் விரட்​டி​னார். இந்த ஓவரில் 14 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன.

வில் ஜேக்ஸ் வீசிய 4-வது ஓவரில் சஞ்சு சாம்​சன், இஷான் கிஷன் ஆகியோர் தலா ஒரு பவுண்​டரி விரட்ட 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. ஜேமி ஓவர்​டன் வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்​டரி​களை விரட்​டி​னார். சேம் கரண் வீசிய 6-வது ஓவரில் சஞ்சு சாம்​சன் 2 பவுண்​டரி​கள் அடித்​தார். பவர்​பிளே​வில் இந்​திய அணி 67 ரன்​கள் சேர்த்​தது.

லியாம் டாவ்​சன் வீசிய 8-வது ஓவரில் சஞ்சு சாம்​சனும், இஷான் கிஷனும் தலா ஒரு சிக்​ஸர் பறக்​க​விட்​டனர். இதனால் இந்​திய அணி 8.3 ஓவர்​களி​லேயே 100 ரன்​களை கடந்​தது. அதிரடி​யாக விளை​யாடிய சஞ்சு சாம்​சன் 26 பந்​துகளில், 7 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களு​டன் அரை சதம் கடந்​தார். இது அவரது 5-வது அரை சதமாக அமைந்​தது. சேம் கரண் வீசிய 9-வது ஓவரில் இஷான் கிஷன் ஒரு சிக்​ஸரும் சஞ்சு சாம்​சன் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரியை​யும் விரட்​டினர். இந்த ஓவரில் 20 ரன்​கள் விளாசப்​பட்​டன.

ஆதில் ரஷித் வீசிய 10-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய இஷான் கிஷன் அடுத்த பந்தை லாங் ஆஃப் திசை​யில் தூக்கி அடித்த போது வில் ஜேக்​ஸிடம் கேட்ச் ஆனது. 18 பந்​துகளை எதிர்​கொண்ட இஷான் கிஷன் 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​கள் சேர்த்​தார். 2-வது விக்​கெட்​டுக்கு இஷான் கிஷன், சஞ்சு சாம்​சன் ஜோடி 45 பந்​துகளில் 97 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து களமிறங்​கிய ஷிவம் துபே​வும் மட்​டையை சுழற்​றி​னார். 10 ஓவர்​களில் இந்​திய அணி 119 ரன்​கள் குவித்​தது. ஜேமி ஓவர்​டன் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தை சஞ்சு சாம்​சன் லாங் ஆஃப் திசை​யில் சிக்​ஸருக்கு விளாசி​னார். ஆதில் ரஷித் வீசிய 12-வது ஓவரில் சஞ்சு சாம்​சனும், ஷிவம் துபே​வும் தலா ஒரு சிக்​ஸர் பறக்​க​விட்​டனர்.

தொடர்ந்து ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய 13-வது ஓவரில் சஞ்சு சாம்​சன் 2 சிக்​ஸர்​களை விளாசி​னார். மட்​டையை சுழற்றி சஞ்சு சாம்​சன் 42 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 89 ரன்​கள் விளாசிய நிலை​யில் வில் ஜேக்ஸ் பந்தை டீப் கவர் திசை​யில் விளாசிய போது பில் சால்ட்​டிடம் கேட்ச் ஆனது. அப்​போது ஸ்கோர் 13.1 ஓவர்​களில் 160 ஆக இருந்​தது.

3-வது விக்​கெட்​டுக்கு சஞ்சு சாம்​சன், ஷிவம் துபே ஜோடி 22 பந்​துகளில், 43 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் களமிறங்​கி​னார். ஆதில் ரஷித் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தை ஷிவம் துபே​வும், 3-வது பந்தை சூர்​யகு​மார் யாத​வும் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டனர். ஆனால் துர​திருஷ்ட​வச​மாக அடுத்த பந்​தில் சூர்​யகு​மார் யாதவ் ஸ்டெம்​பிங் முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். சூர்​யகு​மார் யாதவ் 6 பந்​துகளில், 11 ரன்​கள் சேர்த்​தார்.

இதன் பின்​னர் ஹர்​திக் பாண்​டியா களமிறங்​கி​னார். ஜேமி ஓவர்​டன் வீசிய 17-வது ஓவரில் ஹர்​திக் பாண்​டியா 3 பவுண்​டரி​களை விரட்ட இந்​திய அணி 200 ரன்​களை கடந்​தது. சேம் கரண் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தை ஷிவம் துபே சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார். அதிரடி​யாக விளை​யாடிய ஷிவம் துபே 25 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 43 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஹாரி புரூக்​கின் துல்​லிய​மான ‘த்​ரோ​வால்’ ரன் அவுட் ஆனார்.

இதையடுத்து திலக் வர்மா களமிறங்க இந்த ஓவரில் 12 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய 19-வது ஓவரில் 3 சிக்​ஸர்​களை பறக்​க​விட்ட திலக் வர்மா 5-வது பந்​தில் போல்​டா​னார். திலக் வர்மா 7 பந்​துகளில், 3 சிக்​ஸர்​களு​டன் 21 ரன்​கள் விளாசி​னார். இதன் பின்​னர் அக்​சர் படேல் களமிறங்​கி​னார். இந்த ஓவரில் 20 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன.

வில் ஜேக்ஸ் வீசிய கடைசி ஓவரில் ஹர்​திக் பாண்​டியா 2 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டார். மட்​டையை சுழற்​றிய ஹர்​திக் பாண்​டியா 12 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார். கடைசி பந்​தில் வருண் சக்​ர​வர்த்தி பைஸ் வாயி​லாக 2 ரன்​கள் சேர்த்​தார். முடி​வில் 20 ஓவர்​களில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 257 ரன்​கள் குவித்​தது.

இங்​கிலாந்து அணி சார்​பில் வில் ஜேக்​ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 254 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இங்​கிலாந்து அணி அதிரடி​யாக விளை​யாடியது. பில் சால்ட் 5 ரன்​னில் ஹர்​திக் பாண்​டியா பந்​தி​லும், ஹாரி புரூக் 7 ரன்​னில் ஜஸ்​பிரீத் பும்ரா பந்​தி​லும் ஆட்​ட​மிழந்​தனர். இதன் பின்​னர் களமிறங்​கிய ஜேக்​கப் பெத்​தேல் இந்​திய அணி​யின் பந்​து​வீச்சை வெளுத்து வாங்​கி​னார். வருண் சக்​ர​வர்த்தி வீசிய 6-வது ஓவரில் தொடர்ச்​சி​யாக 3 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டார். இதே ஓவரின் கடைசி பந்​தில் ஜாஸ் பட்​லர் 25 ரன்​களில் வருண் பந்​தில் போல்​டா​னார்.

அதிரடி​யாக விளை​யாடிய ஜேக்​கப் பெத்​தேல் 19 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் அரை சதம் விளாசி​னார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய டாம் பேன்​டன் 5 பந்​துகளில், 17 ரன்​கள் விளாசிய நிலை​யில் அக்​சர் படேல் பந்​தில் போல்​டா​னார். இதையடுத்து களமிறங்​கிய வில் ஜேக்​ஸும் மட்​டையை சுழற்​றி​னார். இந்த ஜோடி​யின் அதிடி​யால் இங்​கிலாந்து அணி 12.2 ஓவர்​களில் 150 ரன்​களை எட்​டியது.

வில் ஜேக்ஸ் 20 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 35 ரன்​கள் எடுத்த நிலை​யில் அர்​ஷ்தீப் சிங் வீசிய ஃபுல்​டாஸ் பந்தை டீப் கவர் திசை​யில் சிக்​ஸரை நோக்கி விளாசி​னார். அப்​போது அக்​சர் படேல் எல்​லைக்​கோட்​டுக்கு அருகே பந்தை பாய்ந்து பிடித்​தார். ஆனால் நிலை தடு​மாறிய அவர், பந்தை உள்ளே தூக்கி வீசி​யபடி எல்​லைக்​கோட்​டுக்கு வெளியே விழுந்​தார். அப்​போது ஷிவம் துபே அதை கேட்ச் செய்ததால் ஜேக்ஸ் ஆட்​ட​மிழந்​தார்.

அப்​போது ஸ்கோர் 14 ஓவர்​களில் 172 ஆக இருந்​தது. இதையடுத்து சேம் கரண் களமிறங்​கி​னார். கடைசி 6 ஓவர்​களில் இங்​கிலாந்து அணி​யின் வெற்​றிக்கு 82 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. வருண் சக்​ர​வர்த்தி வீசிய 15-வது ஓவரில் 13 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. பும்ரா வீசிய அடுத்த ஓவரில் 8 ரன்​களை மட்​டுமே வழங்​கி​னார். கடைசி 24 பந்​துகளில் இங்​கிலாந்து அணி​யின் வெற்​றிக்கு 61 ரன்​கள் தேவைப்​பட்​டது.

அர்​ஷ்தீப் சிங் வீசிய 17-வது ஓவரில் ஜேக்​கப் பெத்​தேல் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி விளாசி மிரட்​டி​னார். இந்த ஓவரில் 16 ரன்​கள் விளாசப்​பட்​டது. 18-வது ஓவரை வீசிய பும்ரா 6 ரன்​களை மட்​டுமே வழங்​கி​னார். இதனால் கடைசி 12 பந்​துகளில் 39 ரன்​கள் தேவை என்ற நிலை உரு​வானது. ஹர்​திக் பாண்​டியா வீசிய 19-வது ஓவரின் முதல் பந்​தில் பெத்​தேல் சிக்​ஸர் விளாசி​னார்.

இந்த பந்தை எல்​லைக்​கோட்​டுக்கு அருகே அக்​சர் படேல் ஒற்றை கையால் கேட்ச் செய்ய முயன்​றார். ஆனால் பந்து அவரது கையில் பட்டு எல்​லைக்​கோட்டை தாண்​டியது. 3-வது பந்தை சேம் கரண் சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது எல்​லைக்​கோட்​டுக்கு அருகே திலக் வர்​மா​விடம் கேட்ச் ஆனது. சேம் கரண் 14 பந்​துகளில் 18 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து ஜேமி ஓவர்​டன் களமிறங்​கி​னார். இந்த ஓவரில் 9 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. கடைசி ஓவரில் இங்​கிலாந்து அணி​யின் வெற்​றிக்கு 30 ரன்​கள் தேவை​யாக இருந்​தது.

ஷிவம் துபே வீசிய இந்த ஓவரின் முதல் பந்​தில் ஜேக்​கப் பெத்​தேல் 2 ரன்​கள் சேர்க்க முயன்ற போது ரன் அவுட் ஆனார். ஜேக்​கப் பெத்​தேல் 48 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 105 ரன்​கள் விளாசி​னார். அவர், ஆட்​ட​மிழந்த பின்​னரே இந்​திய அணி பெரு​மூச்​சு​விட்​டது. இதையடுத்து ஜோப்ரா ஆர்ச்​சர் களமிறங்​கி​னார். அடுத்த இரு பந்​துகளி​லும் 2 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. இதன் பின்​னர் ஜோப்ரா ஆர்ச்​சர் தொடர்ச்​சி​யாக 3 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டார்.

எனினும் அது வெற்​றிக்கு போது​மான​தாக இல்​லை. 20 ஓவர்​களின் முடி​வில் இங்​கிலாந்து அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 246 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. ஜோப்ரா ஆர்ச்​சர் 19, ஜேமி ஓவர்​டன் 2 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இந்​திய அணி தரப்​பில் ஹர்​திக் பாண்​டியா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். அர்​ஷ்தீப் சிங், ஜஸ்​பிரீத் பும்​ரா, வருண் சக்​ர​வர்த்​தி, அக்​சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. வரும் 8-ம் தேதி அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் இந்​தியா - நியூஸிலாந்​து அணி​கள்​ பலப்​பரீட்​சை நடத்​துகின்​றன.

200+ சிக்​ஸர்​கள்: டி 20 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்​டத்​தில் இங்​கிலாந்து சுழற்​பந்து வீச்​சாளர் ஆதில் ரஷித் வீசிய பந்​துகளில் இந்​திய அணி வீரர்​கள் 4 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டிருந்​தனர். இதன் மூலம் சர்​வ​தேச டி 20 அரங்​கில் 200+ சிக்​ஸர்​களை விட்​டுக்​கொடுத்த முதல் பந்​து​வீச்​சாளர் என்ற மோச​மான சாதனையை படைத்​தார் ஆதில் ரஷித்.

தப்​பித்த சாம்​சன்: சஞ்சு சாம்​சன் 15 ரன்​களில் இருந்த போது ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​தில்​ கொடுத்​த பந்​தை ஹாரி புரூக்​ தவற​விட்​டார்​. இந்​த வாய்ப்​பை பயன்​படுத்​திக்​ கொண்​ட சாம்​சன்​ 42 பந்​துகளில்​ 89 ரன்​கள்​ விளாசி மிரட்டினார்.

கோலி சாதனை சமன்: டி 20 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக சஞ்சு சாம்​சன் 89 ரன்​கள் விளாசி​னார். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை தொடரின் வரலாற்​றில் நாக் அவுட் சுற்​றில் அதிக ரன்​கள் விளாசிய இந்​திய வீரர்​களின் பட்​டியலில் விராட் கோலி​யுடன் சாதனையை பகிர்ந்து கொண்​டார். விராட் கோலி 2016-ம் ஆண்டு மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான அரை இறுதி ஆட்​டத்​தில் 89* ரன்​கள் விளாசி​யிருந்​தார். இந்த வகை சாதனை​யில் நியூஸிலாந்​தின் பின் ஆலன் 100 ரன்​கள் விளாசி முதலிடத்​தில் உள்​ளார்.

அதிக 250+ ஸ்கோர்: டி20 போட்டிகளில் அதிக முறை 250-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் குவித்த அணிகள் வரிசையில் இந்தியா (6 முறை) முதலிடம் பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 முறையும், மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, சர்ரே அணிகள் தலா 3 முறையும் 250-க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளன.

தோனி​யும்.. துபே​வும்.. இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் அதிரடி பேட்​ஸ்​மே​னான ஷிவம் துபே ரன் அவுட்​டானார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர், ரன் அவுட் முறை​யில் ஆட்​ட​மிழப்​பது இது 3-வது முறை​யாகும். இந்த வகை​யில் 2007-ம் ஆண்டு தொடரில் தோனி​யும் 3 முறை ரன் அவுட்​டாகி இருந்​தார்.

’சிக்ஸர் சாம்சன்’-ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சஞ்சு சாம்சன் 16 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா(15 சிக்ஸர்கள்) 2-வது இடத்திலும், ஷிவம் துபே (15 சிக்ஸர்கள்) 3-வது இடத்திலும், இஷான் கிஷன் (14 சிக்ஸர்கள்) 4-வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா (14 சிக்ஸர்கள்) 5-வது இடத்திலும், யுவராஜ் சிங் (12 சிக்ஸர்கள்) 6-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியா சிக்ஸர் வேட்டை: நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 88 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்ஸர்களை அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் (76 சிக்ஸர்-2026), தென் ஆப்பிரிக்கா (72 சிக்ஸர்-2026), மேற்கு இந்தியத் தீவுகள் (62 சிக்ஸர்-2024), இந்தியா (61 சிக்ஸர்-2024) உள்ளது.

<div class="paragraphs"><p>டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதியில் கடும் அச்சுறுத்தல் கொடுத்த ஜேக்கப் பெத்தேல் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனதை கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்.</p></div>
மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் - பின்னணி என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in