அஸ்தானா: கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 59 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் மனிஷா பன்வாலா 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் அல்டின் ஷகயேவாவை வீழ்த்தினார்.
இன்று நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அபிகெய்ல் எலிசபெத் நெட்டேவை எதிர்கொள்கிறார் மனிஷா பன்வாலா.