தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு மீண்டும் முயற்சி

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: நா​டாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் ஆகஸ்ட் 13-ல் முடிந்​தது. பொது​வாக நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் கால​வரை​யின்றி ஒத்​திவைக்​கப்​பட்​ட​தாக அறிவிக்​கப்​படும், ஆனால் 8 நாட்​களாகி​யும் கூட்​டத் தொடர் முறை​யாக ஒத்​திவைக்​கப்​பட​வில்​லை.

தொகுதி மறுவரையறை மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசு மீண்​டும் தீவிர முயற்​சி​யில் ஈடு​பட்​டிருக்​கிறது. இதன் காரண​மாகவே நாடாளு​மன்​றக் கூட்​டத்​தொடர் முறைப்​படி ஒத்தி வைக்​கப்​ப​டா​மல் நிலு​வை​யில் வைக்​கப்​பட்​டிருக்​கிறது. மசோ​தாவை நிறைவேற்​று​தற்​காக மழைக்​காலக் கூட்​டத்​தொடரை நீட்​டிக்க வாய்ப்பு உள்​ளது என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

தெற்கு மண்டல கவுன்​சிலின் 31-வது கூட்​டம் சென்​னை​யில் நடை​பெற்​றது. அப்​போது தென் மாநில அரசுகளு​டன் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யில் தொகுதி மறு​வரையறை குறித்​தும் பேசப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

நாடாளு​மன்​றத்​தில் இந்த மசோ​தாவை நிறைவேற்ற மூன்​றில் 2 பங்கு பெரும்​பான்மை பலம் தேவை. இதற்​காக திமுக உள்​ளிட்ட கட்​சிகளிடம் மத்​திய அரசு ஆதரவு கோரி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

இதே விவ​காரம் தொடர்​பாக சரத்​ப​வாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சி​யுட​னும் மத்​திய அரசு திரைமறை​வில் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்​தா​விடம் இருந்து 20 எம்​பிக்​கள் தனி​யாகப் பிரிந்​தனர்.

மகா​ராஷ்டி​ரா​வின் சிவசேனா யுபிடி​யிலும் பிளவு ஏற்​பட்​டுள்​ளது. இவர்​களில் பெரும்​பாலான எம்​பிக்​கள், மசோ​தாவை ஆதரிக்க மத்​திய அரசுடன் பேரம் பேசி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. குறிப்​பாக அவர்​கள் மத்​திய அமைச்​சர​வை​யில் இடம் கோரி வரு​வ​தாகத் தெரி​கிறது.

மத்​திய அமைச்​சரவை விரை​வில் விரி​வாக்​கம் செய்​யப்​படும் என்​றும் இதன்​பிறகு தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மத்​திய அரசு மீண்​டும் கையில் எடுக்​கும் என்​றும் கூறப்​படு​கிறது. மக்​களவை​யில் மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசுக்கு 360 எம்பிக்​கள் ஆதரவு தேவை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
இந்திய பார் கவுன்சில் தலைவரை பதவி நீக்கக் கோரி வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in