காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியா அசத்தல்: 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் வென்றனர்

காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியா அசத்தல்: 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் வென்றனர்
Updated on
2 min read

கிளாஸ்கோ: 23-வது காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யின் குத்​துச்​சண்டை பிரி​வில் இந்​தி​யா​வுக்கு 7 தங்​கப் பதக்​கம், 3 வெள்ளிப் பதக்கம் கிடைத்​துள்​ளது. இந்​திய வீராங்​க​னை​கள் ஜாஸ்​மின் லம்​போரி​யா, சாக்சி சவுத்​ரி, பிரீத்தி பவார், பிரியா கங்​காஸ் ஆகியோர் தங்​கம் வென்​றனர். இந்​திய வீரர் ஜது​மணி சிங் வெள்​ளிப் பதக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார்.

ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்​வெல்த் போட்​டிகள் நடை​பெற்று வரு​கின்​றன. நேற்று நடை​பெற்ற மகளிர் குத்​துச்​சண்டை 57 கிலோ எடைப் பிரி​வில் இந்​திய வீராங்​க​னை​யும் நடப்பு உலக சாம்​பியனு​மான ஜாஸ்​மின் லம்​போரி​யா​வும்​, வடக்கு அயர்​லாந்​தின் மைக்​கேலா வால்​ஷும் மோதினர். இதில் ஜாஸ்​மின் 5-0 என்ற கணக்​கில் மைக்​கேலா வால்ஷை வீழ்த்தி தங்​கம் வென்​றார்.

மகளிர் 54 கிலோ பிரி​வில் இந்​திய குத்​துச்​சண்டை வீராங்​கனை பிரீத்தி பவார் 5-0 என்ற புள்​ளிக் கணக்​கில் கனடா​வின் ஸ்கார்​லெட் டெல்​கடோ​வைத் தோற்​கடித்து தங்​கப்​ப​தக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார்.

நேற்று இரவு நடை​பெற்ற மகளிர் 51 கிலோ பிரிவுக்​கான போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை சாக்சி சவுத்​ரி​யும், இங்​கிலாந்​தின் ரூபி ஒயிட்​டும் மோதினர். இதில் சாக்சி சவுத்ரி 5-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கத்​தைத் தட்​டிச் சென்​றார்.

மகளிர் 60 கிலோ பிரிவுக்​கான போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை பிரியா கங்​காஸ் 4-1 என்ற கணக்​கில் கனடா வீராங்​கனை மேரி பதவுல் அல் அகம​தி​யாவை வீழ்த்தி தங்​கப் பதக்​கத்​தைத்​ தட்​டிச்​ சென்​றார்​.

நேற்று இரவு நடைபெற்ற ஆடவர் 80 கிலோ பிரிவுக்கான போட்டியில் அங்குஷ் பங்கல் தங்கம் வென்றார். ஆடவர் 60 கிலோ பிரிவில் சச்சின் சிவாச் தங்கம் வென்றார். மகளிர் 70 கிலோ எடைப்பிரிவில் அருந்ததி சவுத்ரி தங்கம் வென்றார்.

நேற்று நடை​பெற்ற ஆடவர் 55 கிலோ பிரிவு குத்​துச்​சண்டை இறுதிப் போட்​டி​யில் இந்​திய வீரர் ஜது​மணி சிங்​ 0-5 என்ற கணக்கில் ஆஸ்​திரேலி​யா​வின் ஜை டிக்​சானிடம் தோல்வி கண்டார். 2-வது இடம் பிடித்த ஜது​மணிக்கு வெள்​ளிப் பதக்​கம் கிடைத்​தது. மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா வெள்ளி வென்றார். ஆடவர் 90+ கிலோ எடைப்பிரிவில் நரேந்தர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.

குண்டு எறிதலில் தங்​கம்

பாரா தடகளப் போட்​டி​யின் ஆடவர் எஃப்​-57 பிரி​வில் இந்​திய வீரர் சோமன் ராணா 13.40 மீ்ட்​டர் தூரத்​துக்கு குண்டு எறிந்து தங்​கம் வென்​றார். இதே பிரி​வில் மற்​றொரு இந்​திய வீரர் ஷுபம் ஜுயால் 13.28 மீட்​டர் தூரத்​துக்கு குண்டை வீசி​யெறிந்து வெள்​ளி வென்றார். கேமரூன் வீரர் செட்​ரிக் வெண்​கலத்​தைத் தட்​டிச் சென்​றார்.

டெகத்​லானில் வெண்​கலம்

டெகத்​லான் போட்​டி​யில் (10 விளை​யாட்​டு​கள் இடம்​பெறும் கூட்​டுப் போட்​டி) ஆடவர் பிரி​வில் வெண்​கலப் பதக்​கம் வென்ற முதல் இந்​தி​யர் என்ற வரலாற்று சாதனையை தேஜஸ்​வின் சங்​கர் படைத்​தார். நேற்று முன்​தினம் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் இந்​திய வீரர் தேஜஸ்​வின் சங்​கர், மொத்​தம் 7,976 புள்​ளி​களை பெற்று 3-வது இடம் பிடித்து வெண்​கலத்​தைக் கைப்​பற்​றி​னார். அவருக்கு முழங்​கால் தசை​நார் அழற்சி பாதிப்பு இருந்​த​போ​தி​லும் இந்த போட்​டி​யில் பங்​கேற்று வெண்​கலப் பதக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார். கிரெனடா வீரர் லிண்​டன் விக்​டர் 8,096 புள்​ளி​களு​டன் தங்​க​மும், கனடா​வின் டேமியன் வார்​னர் 8,036 புள்​ளி​களு​டன் வெள்​ளி​யும் வென்​றனர்

பிர​வீன் சித்​ர​வேலுக்கு வெள்ளி

ஆடவர் டிரிப்​பிள் ஜம்ப் போட்​டி​யில் இந்​திய வீரர் பிர​வீன் சித்​ர​வேல் வெள்​ளி​யும், மற்​றொரு இந்​திய வீரர் செல்​வப்​பிரபு திரு​மாறன் வெண்​கல​மும் வென்​றனர். இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில், பிர​வீன் சித்​ர​வேல் 16.58 மீட்​டர் தாண்டி 2-ம் இடம் பிடித்​தார். செல்​வப்​பிரபு 16.52 மீட்​டர் தாண்டி வெண்​கலத்​தைக் கைப்​பற்​றி​னார். இதே பிரி​வில் ஜமைக்கா வீரர் ஜோர்​டான் ஸ்காட் 16.72 மீட்​டர் தாண்டி தங்​கம் வென்றார்.

காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியா அசத்தல்: 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கம் வென்றனர்
ஒரு பெற்றோர், மாணவரை கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை: காங். மூத்த தலைவர் ராகுல் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in