ஒரு பெற்றோர், மாணவரை கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை: காங். மூத்த தலைவர் ராகுல் விமர்சனம்

ஒரு பெற்றோர், மாணவரை கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை: காங். மூத்த தலைவர் ராகுல் விமர்சனம்
Updated on
1 min read

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

ஆயிரக்​கணக்​கான மாணவர்​களின் எதிர்​காலத்தை நிச்​சயமற்ற நிலைக்கு தள்​ளிய கல்வி அமைப்​பின் தோல்வியே உண்​மை​யான பிரச்​சினை ஆகும். மாறாக போராட்​டக்​காரர்​களின் நடத்தை அல்ல.

ஒரு பெற்​றோர் தனது குழந்​தையை இழந்து துன்​பப்​படு​வதை பார்ப்​பதை விட வேதனை​யானது வேறெது​வும் இல்​லை. பறி​போன ஒவ்​வொரு இளம் உயிருக்​கும் பின்​னால், ஒரு​போதும் நீங்​காத துயரத்தை சுமக்​கும் ஒரு குடும்​ப​மும், சீர்​குலைந்த கல்வி முறை குறித்த தீவிர​மான கேள்வி​களும் உள்​ளன.

வினாத்​தாள் கசிவு, தேர்​வு​கள் ரத்து போன்ற குளறு​படிகளால் பல ஆண்​டு​கால உழைப்பு ஒரே இரவில் வீணாகிறது. தங்​களுக்கு நேர்​மை​யாக நடந்​து​கொள்​ளாத ஒரு அமைப்​பில், நேர்​மை​யாக செயல்​படு​மாறு நம் மாணவர்​கள் அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்.

மாணவர்​களை ‘மன்​னிப்​பது’ பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு துணிச்​சல் இருக்​கிறது. துயரத்​தில் இருக்​கும் எந்​தவொரு பெற்​றோரையோ அல்​லது வினாத்​தாள் கசி​வால் எதிர்​காலத்தை இழந்த எந்​தவொரு மாணவரையோ அவர் சந்​திக்​க​வில்​லை.இந்​திய மாணவர்​களுக்கு அவருடைய மன்​னிப்பு தேவை​யில்​லை. பிரதமர் மன்​னிப்பு கோரு​வதே மாணவர்​களுக்கு தேவை. இவ்வாறு ராகுல்​ கூறியுள்​ளார்​.

ஒரு பெற்றோர், மாணவரை கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை: காங். மூத்த தலைவர் ராகுல் விமர்சனம்
CWG 2026 | நீரஜ் சோப்​ரா​வுக்கு வெள்ளி: முர்மு, மோடி வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in