

மும்பை: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் (ஐஎம்எல்) 2-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் 24 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். போட்டிகள் மும்பை, வதோதரா, விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட உள்ளன. முதல் சீசனில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஷேன் வாட்சன், யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல் மற்றும் குமார் சங்ககரா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 தொழில்முறை அணிகள் மீண்டும் கலந்து கொண்டு மோதஉள்ளன. போட்டி அட்டவணை, வீரர்கள் பட்டியல் மற்றும் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வரும் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.