கோப்புப்படம்
விளையாட்டு
கால்பந்தில் ஐசிஎஃப் ஆட்டம் டிரா
சென்னை: சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐசிஎஃப் - தமிழக காவல்துறை அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
தமிழக காவல்துறை அணி சார்பில் 17-வது நிமிடத்தில் கணேஷ மூர்த்தியும், ஐசிஎஃப் அணி தரப்பில் 80-வது நிமிடத்தில் நரேஷும் கோல் அடித்தனர். தமிழக காவல்துறை அணியைச் சேர்ந்த கமலப்பிரியன் சிறந்த வீரராக தேர்வானார்.
