50 ஓவர், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிரடியான மாற்றங்கள்

ஐபிஎல் போன்று எலிமினேட்டர் சுற்று அறிமுகம்
50 ஓவர், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிரடியான மாற்றங்கள்
Updated on
2 min read

எடின்பர்க்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர கூட்டம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை, 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களின் போட்டி அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் 14 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்தத் தொடர் சூப்பர் சீரிஸ், குரூப் ஸ்டேஜ், சூப்பர் 7, அரை இறுதி, இறுதிப் போட்டி என 4 சுற்றுகளை கொண்டதாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சூப்பர் சீரிஸில் 12, 13 மற்றும் 14-வது இடங்களில் உள்ள அணிகள் மோதும்.

இதில் வெற்றி பெறும் அணி குரூப் ஸ்டேஜில் இணையும். ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படும் இந்த சுற்றில் 12 அணிகள் பங்கேற்கும். இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெறும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இந்த வகையில் இந்த சுற்றில் 30 ஆட்டங்கள் நடைபெறும்.

புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் தலா 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதேவேளையில் இரு பிரிவிலும் சேர்த்து சிறந்த நிலையில் உள்ள அணி ஒன்றும் அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெறும். ‘சூப்பர் 7’ சுற்றான இதில் ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்படும். இந்த வகையில் 21 ஆட்டங்கள் நடைபெறும். இதில் இருந்து 4 அணிகள் அரை இறுதிக்கும் அங்கிருந்து 2 அணிகள் இறுதிப் போட்டிக்கும் முன்னேறும்.

இதேபோன்று டி20 உலகக் கோப்பையில் கடந்த முறையை போன்றே 20 அணிகள் பங்கேற்கும். மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறும். இவை 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெறும். ரவுண்ட் ராபின் முறையில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நடைபெறும். இந்த வகையில் 30 ஆட்டங்கள் நடத்தப்படும்.

புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 10 சுற்றான இதில் 10 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெறும். ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு இரு பிரிவிலும் முதலிடத்தை பெறும் தலா ஒரு அணி அரை இறுதிக்கு நேரடியாக முன்னேறும்.

மற்ற 2 அணிகளை தேர்வு செய்ய ஐபிஎல் போன்று எலிமினேட்டர் ஆட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இரு பிரிவிலும் தலா 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடும். எலிமினேட்டர் ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இங்கிருந்து 2 அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

50 ஓவர், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிரடியான மாற்றங்கள்
அர்ஜெண்டினா அதிரடி கம்பேக்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in