லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்

லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்
Updated on
1 min read

பியூனஸ் அய்ரஸ்: நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.

அவர் காலமான செய்தியை மெஸ்ஸியின் சிறு வயது கால்பந்து கிளப் அணியான நியூ வெல்ஸ் ஓல்டு பாய்ஸ் கிளப் அணி உறுதி செய்துள்ளது. நமது கிளப்பின் ஆதரவாளரும், தொழிலதிபரும், லியோனல் மெஸ்ஸியின் தந்தையுமான ஜார்ஜ் மெஸ்ஸி, சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவிக்கிறோம் என்று அந்த அணி கூறியுள்ளது. ரொஸாரியோவில் உள்ள மருத்துவமனையில் அவர் காலமானார் என தகவல்.

அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் கால்பந்தாட்ட தொடக்கம் முதல், நட்சத்திர வீரர் என்ற உச்சத்தை அவர் தொடும் வரை, அவருக்கு ஜார்ஜ் மெஸ்ஸி மற்றும் அவரது மனைவி செலியா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். ஜார்ஜ் மெஸ்ஸியின் மறைவை அடுத்து நியூ வெல்ஸ் அணியின் கொடி, அரைக் கம்பத்தில் பறக்கும் என அந்த அணி தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதத்துக்கு முன்பு ஜார்ஜ் மெஸ்ஸி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதை அவரது குடும்பம் உறுதி செய்தது. மேலும், அவர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

லியோனல் மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தில் ஜார்ஜ் மெஸ்ஸி முக்கிய பங்காற்றினார். தனது மகனின் விளையாட்டு கரியர் சார்ந்து பல்வேறு விவகாரங்களை அவர் கவனித்து வந்தார். கடந்த 2021-ல் பார்சிலோனா அணியில் இருந்து லியோனல் மெஸ்ஸி விடைபெற்றார். அப்போது ஜார்ஜ் மெஸ்ஸி, தனது கருத்துகளை பொது வெளியில் பகிர்ந்திருந்தார்.

லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Poco M8 Power ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in