சில போட்​டிகளை மட்​டும் வைத்து எடை போடக்கூ​டாது: சொல்​கிறார் கேகேஆர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன்

ஃபின் ஆலன்

ஃபின் ஆலன்

Updated on
1 min read

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி முதல் வெற்​றியை பெறு​வதற்​காக போராடி வரு​கிறது. 3 முறை சாம்​பிய​னான அந்த அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3-ல் தோல்வி அடைந்​துள்​ளது. ஒரு ஆட்​டம் மழை காரண​மாக ரத்​தாகி​யிருந்​தது.

இந்​நிலை​யில் கொல்​கத்தா அணி இன்று சிஎஸ்​கேவுடன் சேப்​பாக்​கம் மைதானத்​தில் மோதுகிறது. இதையொட்டி நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது கொல்​கத்தா அணி​யின் தொடக்க வீர​ரான ஃபின் ஆலன் கூறிய​தாவது:

சில போட்​டிகள் மட்​டுமே முடிந்​துள்​ளன. இதை வைத்து அணி​யின் திறமை எதை​யும் முடிவு செய்ய முடி​யாது. தனிப்​பட்ட முறை​யில், முதல் 2 போட்​டிகளில் எனக்கு நல்ல தொடக்​கம் கிடைத்​தது. ஆனால் இன்​னிங்ஸை பெரிய அளவில் கட்​டமைக்க முடி​யாமல் போனது. பெரிய இன்​னிங்ஸை நான் விளை​யாடும் தூரம் வெகுதொலை​வில் இல்லை என்று நம்​பு​கிறேன்.

எங்​களது பேட்​ஸ்​மேன்​கள் களத்​தில் நிலைத்து நின்று விளை​யாடு​வதற்​கும் அதிரடி​யாக விளை​யாடு​வதற்​கும் இடையி​லான சரி​யான சமநிலை​யைக் கண்​டறிய வேண்​டும். கொல்​கத்​தா​வில் நில​வும் வானிலை காரண​மாக ஆடு​களம் வழக்​க​மாக இருப்​ப​தைப் போல பேட்​டிங்​கிற்கு சாதக​மாக இல்​லை. அந்த ஆடு​களத்​தில் எது சிறந்த ஸ்கோ​ராக இருக்​கும் என்​பதை புரிந்​து​கொள்ள முயற்சி செய்து வரு​கிறோம்.

என்​னுடைய பேட்​டிங்கை பொறுத்​தவரை​யில் பயிற்சி முறை​களில் கவனம் செலுத்தி வரு​கிறேன். சீரான மனநிலையை கடைபிடிக்க முயற்​சிக்​கிறேன். ஒவ்​வொரு போட்​டி​யிலும் அதே மனநிலை​யுடன் களமிறங்​கு​வதற்​கான உத்​வேகத்​தைக் கண்​டறிய​வும், அதை ஒவ்​வொரு போட்​டி​யிலும் அப்​படியே பிர​திபலிக்​க​வும் தொடர்ந்து முயற்சி செய்​து வரு​கிறேன்​. இவ்​வாறு ஃபின்​ ஆலன்​ கூறினார்.

<div class="paragraphs"><p>ஃபின் ஆலன்</p></div>
சிஎஸ்கே - குஜராத் போட்டியில் மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in