

புதுடெல்லி: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று முன்தினம் இந்தூரில் நடைபெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி இலக்கை துரத்திய நிலையில் 6-வது ஓவரின்போது, மயங்க் யாதவ் பந்துவீச்சில் ரோவ்மன் பொவெல் ஆட்டமிழந்தார். அப்போது விரக்தியில் அவர், தனது பேட்டால் பந்தைத் தட்டினார்.
இதேபோன்று 13-வது ஓவரின்போது நடுவர் வைடு வழங்காததால் ஷெர்ஃபேன் ரூதர்போர்டு ஆக்ரோஷமாகக் குரல் எழுப்பினார். இவை ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறிய செயலாகும்.
இதனால் ரோவ்மன் பொவெல், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா ஒரு தகுதி நீக்க புள்ளி அபராதமாக வழங்கப்பட்டுள்ளது.