

டர்பன்: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 390 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 284 ரன்களும் எடுத்தன.
106 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 58 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக மேட் ரென்ஷா 99 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். நிக் மேடின்சன் 48, டிராவிஸ் ஹெட் 11, மார்னஷ் லபுஷேன் 37, ஸ்டீவ் ஸ்மித் 27, அலெக்ஸ் கேரி 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். பியூ வெப்ஸ்டர் 39, கேப்டன் பாட் கம்மின்ஸ் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அன்ரிச் நோர்க்கியா, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். மார்கோ யான்சன், சைமன் ஹார்மர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 421 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்தது. அந்த அணி 41 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது.