அமெரிக்கா - பராகுவே மோதல் | FIFA WC 2026

அமெரிக்கா - பராகுவே மோதல் | FIFA WC 2026
Updated on
1 min read

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் இன்று காலை 6.30 மணிக்கு லால்ஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்​தில் ‘டி’ பிரி​வில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் தொடரை நடத்​தும் அமெரிக்​கா, பராகுவே அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

இது 32 வருடங்​களுக்கு பிறகு அமெரிக்க மண்​ணில் நடை​பெறும் உலகக் கோப்பை கால்​பந்து தொடரின் ஆட்​டம் என்​ப​தால் மிகுந்த எதிர்​பார்ப்பு நில​வு​கிறது. பயிற்​சி​யாளர் பொச்​செட்​டினோ​வால் தேர்வு செய்​யப்​பட்​டுள்ள 26 பேர்​கொண்ட அமெரிக்க அணி​யில் இதற்கு முன்பு உலகக் கோப்​பை​யில் விளை​யாடிய அனுபவ​முள்ள 13 வீரர்​களும், முதன்​முறை​யாகக் களம் காணும் 13 வீரர்​களும் இடம் பெற்​றுள்​ளனர்.

உலகக் கோப்​பைக்​கான பயிற்​சிகளில் அமெரிக்க அணி ஏற்ற இறக்​கங்​களை சந்​தித்து இருந்​தது. எனினும் அமெரிக்க அணி தற்​போது ஃபார்​மிற்​குத் திரும்பி வரு​வதற்​கான அறிகுறிகள் தெரிகின்றன. கடந்த மே 31 அன்று சார்​லட் நகரில் நடை​பெற்ற பயிற்சி போட்​டி​யில் செனகல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா தோற்​கடித்​தது.

இதன் பின்​னர் சிகாகோ​வில் நடை​பெற்ற நட்​புரீ​தி​யான ஆட்டத்தில், 4 முறை உலகக் கோப்பை சாம்​பிய​னான ஜெர்மனியிடம் 2-1 எனத் தோற்​ற​போ​தி​லும், அவர்​களுக்கு ஈடு​கொடுத்து மிகச் சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்தி இருந்​தது அமெரிக்க அணி.

கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் பென்​சில்​வேனி​யா​வின் செஸ்​டர் நகரில் நடை​பெற்ற நட்​புரீ​தி​யான ஆட்​டத்​தில் பராகுவே அணிக்கு எதி​ராக அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்றிருந்​தது.

இதனால் உலகக் கோப்பை தொடரில் பராகுவே அணிக்கு எதிரான தனது முதல் ஆட்​டத்தை நம்​பிக்​கை​யுடன் எதிர்கொள்கிறது அமெரிக்க அணி.

இந்த ஆண்டு உலகக் கோப்​பை​யில் அணி​களின் எண்​ணிக்கை 48 ஆக உயர்த்​தப்​பட்​டது பராகுவே அணிக்கு சாதக​மாக அமைந்​தது. இதன் மூலம், 2010-ம் ஆண்​டுக்கு பிறகு அந்த அணி உலகக் கோப்பைத் தொடரில் களம் காண்​கிறது. 2010-ம் ஆண்டு தொடரில் பராகுவே அணி கால்​இறு​தி வரை முன்​னேறி​யிருந்​தது.

அமெரிக்கா - பராகுவே மோதல் | FIFA WC 2026
போஸ்னியா & ஹெர்சகோவினாவுடன் இன்று மோதல்: சொந்த மண்ணில் வெற்றி முனைப்பில் கனடா | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in