குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே அணிகள் எப்படி? | FIFA WC 2026

உலகக் கோப்பை கால்பந்து அணிகள் - ஒரு பார்வை
குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே அணிகள் எப்படி? | FIFA WC 2026
Updated on
2 min read

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ்

பயிற்​சி​யாளர்: டிடியர் டெஷாம்ப்ஸ்

பிஃபா தரவரிசை: 3

சிறப்​பான செயல் திறன்: 1998, 2018-ல் சாம்​பியன்

கடைசி உலகக் கோப்​பை: 2022, கத்​தா​ரில் 2-வது இடம்

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 16

தகுதி பெற்ற விதம்: யுஇஎஃப்ஏ தகு​திச் சுற்​றின் ‘டி’ பிரிவில் ஒரு போட்​டி​யில் கூட தோல்​வியடை​யாமல் முதலிடம் பிடித்​து, பிரான்ஸ் அணி உலகக் கோப்​பைத் தொடருக்கு தகுதி பெற்​றது.

நட்​சத்​திரங்​கள்: கிலியன் எம்​பாப்​பே, உஸ்​மான் டெம்​பலே, வில்லி​யம் சலி​பா.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 73 ஆட்​டங்​கள், 39 வெற்றி, 14 டிரா, 20 தோல்​வி, 136 அடித்த கோல்​கள், 75 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 16 vs செனகல்

ஜூன் 22 vs ஈராக்

ஜூன் 26 vs நார்வே

ஈராக்

பயிற்​சி​யாளர்: கிரஹாம் அர்​னால்ட்

பிஃபா தரவரிசை: 56

சிறப்​பான செயல் திறன்: 1986-ல் லீக் சுற்​றுடன் வெளி​யேற்​றம்.

கடைசி உலகக் கோப்​பை: 1986

பங்​கேற்ற உலகக் கோப்​பை: 1

தகுதி பெற்ற விதம்: மெக்​சிகோ​வில் நடை​பெற்ற பிளே-ஆஃப் தொடரின் இறு​திப் போட்​டி​யில் பொலி​வியா அணியை 2-1 என்ற கோல் கணக்​கில் வீழ்த்​தி, ஈராக் அணி உலகக் கோப்​பைத் தொடருக்கு கடைசி அணி​யாக தகுதி பெற்​றது.

நட்​சத்​திரங்​கள்: அலி இப்​ராஹிம் அல்​-ஹம்​மாடி, அய்​மன் ஹுசைன், அஹ்மத் பாசில் அல்​-ஃ​பாத்​லி.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 3 ஆட்​டங்​கள், 0 வெற்றி, 0 டிரா, 3 தோல்​வி, 1 அடித்த கோல்​கள், 4 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 16 vs நார்வே

ஜூன் 22 vs பிரான்ஸ்

ஜூன் 26 vs செனகல்

செனகல்

பயிற்​சி​யாளர்: பாப் தியாவ்

பிஃபா தரவரிசை: 15

சிறப்​பான செயல் திறன்: 2002-ம் ஆண்​டில் கால் இறுதி வரை முன்​னேற்​றம்.

கடைசி உலகக் கோப்​பை: 2022, கத்​தார்

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 2

தகுதி பெற்ற விதம்: செனகல் தேசிய கால்​பந்து அணி, ஆப்பிரிக்க தகு​திச் சுற்​றின் ‘பி’ பிரிவில் ஒரு போட்​டி​யில் கூட தோல்​வியடை​யாமல் முதலிடம் பிடித்​து, உலகக் கோப்​பைத் தொடருக்கு தகுதி பெற்​றது.

நட்​சத்​திரங்​கள்: சாடியோ மானே, காலிடூ கூலி​பாலி, மற்​றும் இப்ராஹிம் எம்​பாயே.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 12 ஆட்​டங்​கள், 5 வெற்றி, 3 டிரா, 4 தோல்​வி, 16 அடித்த கோல்​கள், 17 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 16 vs பிரான்ஸ்

ஜூன் 22 vs நார்வே

ஜூன் 26 vs ஈராக்

நார்வே

பயிற்​சி​யாளர்: ஸ்டேல் சொல்​பக்​கன், பிஃபா தரவரிசை: 31

சிறப்​பான செயல் திறன்: 1998-ம் ஆண்டு தொடரில் கால் இறுதிக்கு முந்​தைய சுற்று வரை முன்​னேற்​றம்.

கடைசி உலகக் கோப்​பை: 1998

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 3

தகுதி பெற்ற விதம்: யுஇஎஃப்ஏ தகு​திச் சுற்​றின் ‘ஐ’ பிரி​வில் எவராலும் முறியடிக்க முடி​யாத ஒரு அசாத்​திய சாதனையைப் படைத்​து, நார்வே அணி உலகக் கோப்​பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்​றது. இதன் மூலம், கடந்த 28 ஆண்டுகளாக உலகக் கோப்​பைத் தொடருக்​குத் தகுதி பெற முடியாமல் இருந்த தங்​களது நீண்ட கால ஏமாற்​றத்​துக்கு நார்வே அணி முற்​றுப்​புள்ளி வைத்​தது.

நட்​சத்​திரங்​கள்: எர்​லிங் ஹாலண்ட், மார்ட்​டின் ஒடே​கார்ட், அலெக்​சாண்​டர்​ சோர்​லோத்​.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 8 ஆட்​டங்​கள், 2 வெற்றி, 3 டிரா, 3 தோல்​வி, 7 அடித்த கோல்​கள், 8 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன்​ 16 vs ஈராக்

ஜூன் 22 vs செனகல்

ஜூன் 26 vs பிரான்ஸ்

குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே அணிகள் எப்படி? | FIFA WC 2026
குரூப் ‘ஜி’ பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து அணிகள் எப்படி? | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in