

ரியான் மென்டஸ், சலிம் அல்-தவ்சாரி, ஜோஸ் மரியா கிமினெஸ், லாமின் யமல்
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஹெச்’ ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
கேப் வெர்டே
பயிற்சியாளர்: புபிஸ்டா
பிஃபா தரவரிசை: 60
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: முதல் முறையாக பங்கேற்பு
தகுதி பெற்ற விதம்: ‘புளூ ஷார்க்ஸ்’ என்று அழைக்கப்படும் கேப் வெர்டே கால்பந்து அணி, ஆப்பிரிக்க தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அசத்தலாக விளையாடி உலகக் கோப்பைத் தொடருக்குத் முதன்முறையாக தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கேமரூன், அங்கோலா போன்ற ஆப்பிரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வலுவான அணிகள் இருந்த கடினமான பிரிவில் கேப் வெர்டே அணி முதலிடம் பிடித்து அசத்தி இருந்தது.
நட்சத்திரங்கள்: ரியான் மென்டஸ், ஜோவன் கப்ரால், வோசின்ஹா
மோதல்
ஜூன் 15 vs ஸ்பெயின்
ஜூன் 21 vs உருகுவே
ஜூன் 26 vs சவுதி
சவுதி அரேபியா
பயிற்சியாளர்: ஜார்ஜியோஸ் டோனிஸ்
பிஃபா தரவரிசை: 61
சிறப்பான செயல் திறன்: 1994-ல் கால் இறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2022
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 6
தகுதி பெற்ற விதம்: சவுதி அரேபியா அணி கடுமையாக போராடியே உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. பிளே ஆஃப் சுற்றில் இந்தோனேஷியாவை வீழ்த்தியும், ஈராக் அணியை டிரா செய்தும் உலகக் கோப்பையில் கால்பதித்தது சவுதி அரேபியா அணி
நட்சத்திரங்கள்: சலிம் அல்-தவ்சாரி, சவுத் அப்துல்ஹமீத், முகமது கான்
ஒட்டுமொத்த செயல் திறன்: 19 ஆட்டங்கள், 4 வெற்றி, 2 டிரா, 13 தோல்வி, 14 அடித்த கோல்கள், 44 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 15 vs உருகுவே
ஜூன் 21 vs ஸ்பெயின்
ஜூன் 26 vs கேப் வெர்டே
உருகுவே
பயிற்சியாளர்: மார்செலோ பீல்சா, பிஃபா தரவரிசை: 16
சிறப்பான செயல் திறன்: 1930, 1950-ம் ஆண்டுகளில் சாம்பியன்
கடைசி உலகக் கோப்பை: 2022, பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 14
தகுதி பெற்ற விதம்: தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தகுதி சுற்றில் உருகுவே கால்பந்து அணி 4-வது இடம் பிடித்து உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்: ஜோஸ் மரியா கிமினெஸ், ஃபெடரிகோ வால்வெர்டே, டார்வின் நூனெஸ்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 59 ஆட்டங்கள், 25 வெற்றி, 13 டிரா, 21 தோல்வி, 89 அடித்த கோல்கள், 76 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 15 vs சவுதி
ஜூன் 21 vs. கேப் வெர்டே
ஜூன் 26 vs. ஸ்பெயின்
ஸ்பெயின்
பயிற்சியாளர்: லூயிஸ் டி லா ஃபியூண்டே
பிஃபா தரவரிசை: 2
சிறப்பான செயல் திறன்: 2010-ல் சாம்பியன்
கடைசி உலகக் கோப்பை: 2022
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 16
தகுதி பெற்ற விதம்: யுஇஎஃப்ஏ தகுதிச் சுற்றின் குரூப் இ-ல் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் முதலிடம் பிடித்து, ஸ்பெயின் அணி உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றது.
நட்சத்திரங்கள்: லாமின் யமல், ராபின் லு நார்மண்ட், ரோட்ரி.
ஒட்டுமொத்த செயல் திறன்: 67 ஆட்டங்கள், 31 வெற்றி, 17 டிரா, 19 தோல்வி, 108 அடித்த கோல்கள், 75 வாங்கிய கோல்கள்
ஜூன் 15 vs கேப் வெர்டோ
ஜூன் 21 vs. சவூதி
ஜூன் 26 vs. உருகுவே