குரூப் ‘ஜி’ பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து அணிகள் எப்படி? | FIFA WC 2026

உலகக் கோப்பை கால்பந்து அணிகள் - ஒரு பார்வை
கெவின் டி ப்ரூய்ன், முகமது சலா, சமன் சமன் ஜஹூதஸ், கிறிஸ் வுட்

கெவின் டி ப்ரூய்ன், முகமது சலா, சமன் சமன் ஜஹூதஸ், கிறிஸ் வுட்

Updated on
2 min read

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஜி’ பெல்​ஜி​யம், எகிப்​து, ஈரான், நியூஸிலாந்து ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

பெல்​ஜி​யம்

பயிற்​சி​யாளர்: ரூடி கார்​சியா, பிஃபா தரவரிசை: 9

சிறப்​பான செயல் திறன்: 20018-ல் 3-வது இடம்

கடைசி உலகக் கோப்​பை: 2022

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 14

தகுதி பெற்ற விதம்: வட அமெரிக்கா தகுதி சுற்​றில் பெல்​ஜி​யம் அணி ‘ஜே’ பிரி​வில் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றது.

நட்​சத்​திரங்​கள்: கெவின் டி ப்ரூய்ன், ஜெரெமி டோகு, திபாட் கூர்​டோ​யிஸ்

ஒட்​டுமொத்த செயல் திறன்: 51 ஆட்​டங்​கள், 21 வெற்றி, 10 டிரா, 20 தோல்​வி, 69 அடித்த கோல்​கள், 74 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 15 vs எகிப்து

ஜூன் 21 vs ஈரான்

ஜூன் 26 vs நியூஸிலாந்து

எகிப்து

பயிற்​சி​யாளர்: ஹொசாம் ஹசன்

பிஃபா தரவரிசை: 29

சிறப்​பான செயல் திறன்: 1934, 1990, 2018-ம் ஆண்டு தொடர்களில் லீக் சுற்​றுடன் வெளி​யேற்​றம்.

கடைசி உலகக் கோப்​பை: 2018

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 3

தகுதி பெற்ற விதம்: ஆப்​பிரிக்க கால்​பந்து கூட்​டமைப்பு தகுதி சுற்​றில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றிருந்த எகிப்து அணி 8 வெற்​றி, 2 டிராக்​களுடன் 26 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றது.

நட்​சத்​திரங்​கள்: முகமது எல் ஷெனா​வி, உமர் மர்​மவுஷ், முகமது சலா.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 7 ஆட்​டங்​கள், 0 வெற்றி, 2 டிரா, 3 தோல்​வி, 5 அடித்த கோல்​கள், 12 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 15 vs பெல்​ஜி​யம்

ஜூன் 21 vs நியூஸிலாந்து

ஜூன் 26 vs ஈரான்

ஈரான்

பயிற்​சி​யாளர்: அமீர் காலேனோயி, பிஃபா தரவரிசை: 20

உலகக் கோப்​பை​யில் சிறப்​பான செயல் திறன்: 1978, 1998, 2006, 2014, 2018, 2022-ம் ஆண்டு தொடர்​களில் லீக் சுற்​றுடன் வெளியேற்​றம்.

கடைசி உலகக் கோப்​பை: 2022

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 6

தகுதி பெற்ற விதம்: ஆசிய கால்​பந்து கூட்​டமைப்பு தகுதி சுற்றின் இறு​திக்​கட்​டத்​தில் ‘ஏ’ பிரி​வில் ஈரான் அணி 23 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்​து, உலகக் கோப்​பைக்கு தகுதி பெற்​றது.

நட்​சத்​திரங்​கள்: சமன் ஜஹூதஸ், லிரேசா ஜஹான்​பக் ஷ், மஹ்தி தர்மி

ஒட்​டுமொத்த செயல் திறன்: 18 ஆட்​டங்​கள், 3 வெற்றி, 4 டிரா, 11 தோல்​வி, 13 அடித்த கோல்​கள், 31 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 15 vs நியூஸிலாந்து

ஜூன் 21 vs பெல்​ஜி​யம்

ஜூன் 26 vs எகிப்து

நியூஸிலாந்து

பயிற்​சி​யாளர்: டேரன் பேஸ்லி

பிஃபா தரவரிசை: 85

சிறப்​பான செயல் திறன்: 1982, 2010-ம் ஆண்​டு​களில் லீக் சுற்றுடன் வெளி​யேற்​றம்.

கடைசி உலகக் கோப்​பை: 2010,

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 2

தகுதி பெற்ற விதம்: ஒசி​யானா தகுதி சுற்​றின் இறு​திப் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 5-1 என்ற கோல் கணக்​கில் தஹி​தியை தோற்​கடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றது.

நட்​சத்​திரங்​கள்: கிறிஸ் வுட், மார்கோ ஸ்டா​மெனிக், பென் ஓல்டு

ஒட்​டுமொத்த செயல் திறன்: 6 ஆட்​டங்​கள், 0 வெற்றி, 3 டிரா, 3 தோல்​வி, 4 அடித்த கோல்​கள், 14 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன்​ 15 vs ஈரான்

ஜூன் 21 vs எகிப்து

ஜூன் 26 vs பெல்ஜியம்

<div class="paragraphs"><p>கெவின் டி ப்ரூய்ன், முகமது சலா, சமன் சமன் ஜஹூதஸ்,&nbsp;கிறிஸ் வுட்</p></div>
குரூப் ‘எஃப்’ - நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், துனீசியா அணிகள் எப்படி? | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in