

சாண்டியாகோ கிமினெஸ், தாமஸ் சவுசெக், பெர்சி தவ், சன் ஹியுங்-மின்
அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் வரும் 11-ம் தேதி முதல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், வீரர்களின் திறன், சாதனைகள், உலகக் கோப்பை வரலாற்றில் அணிகள் பெற்ற இடங்கள் உள்ளிட்டவை குறித்து இங்கு விரிவாகத் தரப்படுகிறது.
குரூப் ‘ஏ’: மெக்சிகோ, தென்கொரியா, செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா
சொந்த மண்ணில் மெக்சிகோ
பயிற்சியாளர்: ஜேவியர் அகுய்ரே
பிஃபா தரவரிசை: 15
தகுதி பெற்ற விதம்: 2023-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பிஃபா கவுன்சில் எடுத்த முடிவைத் தொடர்ந்து உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்தும் நாடு என்பதால் மெக்சிகோ நேரடியாக தகுதி பெற்றது.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 1970, 1986-ம் ஆண்டுகளில் கால் இறுதி சுற்று வரை முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: கத்தார் 2022-ல் லீக் சுற்றுடன் வெளியேற்றம்
முதல் உலகக் கோப்பை: உருகுவே 1930, லீக் சுற்றுடன் வெளியேற்றம்
பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்கள்: 18
உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்தும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் மெக்சிகோ, சொந்த நாட்டு ரசிகர்களின் ஆதரவோடு களம் இறங்குகிறது. தென்கொரியா, செக்குடியரசு ஆகிய அணிகளை வீழ்த்தி மெக்சிகோ அணி முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்திர வீரர்: சாண்டியாகோ கிமினெஸ்
ஒட்டுமொத்த செயல்பாடு: ஆட்டங்கள்: 60, வெற்றி: 17, டிரா: 15, தோல்வி: 28, அடித்த கோல்கள்: 62, வாங்கிய கோல்கள்: 101
தென் ஆப்பிரிக்கா
பயிற்சியாளர்: ஹ்யூகோ ப்ரூஸ்
பிஃபா தரவரிசை: 60
தகுதி பெற்றவிதம்: ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு தகுதிச் சுற்றின் 'சி' பிரிவில் முதலிடம் பிடித்ததன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி கடந்த ஆண்டு அக்டோபர் 14-ல் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருந்தது. இந்தப் பிரிவில் நைஜீரியா, பெனின் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 1998, 2002, 2010-ம் ஆண்டுகளில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்
கடைசி உலகக் கோப்பை: 2010-ம் ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேற்றம்
முதல் உலகக் கோப்பை: 1998, லீக் சுற்றுடன் வெளியேற்றம்
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 4
தென் ஆப்பிரிக்க அணிக்கு இழப்பதற்கு எதுவுமில்லாத நிலை என்று விளையாடுவதால், மற்ற மூன்று முக்கிய அணிகளில் யாராவது ஒரு சிறு தவறு செய்தாலும், அவர்களின் நாக்-அவுட் வாய்ப்பைக் கெடுக்கும் 'ஸ்பாய்லராக' அந்த அணி மாறக்கூடும்.
நட்சத்திர வீரர்: பெர்சி தவ்
ஒட்டுமொத்த செயல் திறன்: ஆட்டங்கள்: 9, வெற்றி: 2, டிரா: 4, தோல்வி: 3, அடித்த கோல்கள்: 11, வாங்கிய கோல்கள்: 16
செக் குடியரசு
பயிற்சியாளர்: மிரோஸ்லாவ் கோபெக்
பிஃபா தரவரிசை: 41
தகுதி பெற்ற விதம்: ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தகுதி சுற்றில் 2-வது இடத்தைப் பிடித்த செக் குடியரசு அணி, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளே-ஆஃப் சுற்றில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கான தங்களது இடத்தை உறுதி செய்தனர்.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 1934 1962-ம் ஆண்டு தொடர்களில் 2-வது இடம் கடைசி உலகக் கோப்பை: 2006-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்.
முதல் உலகக் கோப்பை: 1934-ம் ஆண்டு, இத்தாலி
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 10
செக் குடியரசு அணி மிகவும் வலுவான தற்காப்பு வடிவமைப்பு, கட்டுப்பாடு மற்றும் பந்தை காற்றில் எட்டிப் பிடிப்பதில் ஆதிக்கம் செலுத்தும் திறன் கொண்டது. தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் வேகத்தைக் குறைக்கவும், மெக்சிகோ அணியை தங்கள் உடல் வலிமையால் திணறடிக்கவும் திட்டமிடுவார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெல்லும் பட்சத்தில், பெரிய அணிகளுக்கு எதிராகவும் புள்ளிகளைப் பெறும் தகுதியை பெறுவார்கள்.
நட்சத்திர வீரர்: தாமஸ் சவுசெக்
ஒட்டுமொத்த செயல் திறன்: ஆட்டம்: 33, வெற்றி:12, டிரா:5, தோல்வி: 16, அடித்த கோல்கள்: 47, வாங்கிய கோல்கள்: 49
தென் கொரியா
பயிற்சியாளர்: ஹாங் மியுங்போ
பிஃபா தரவரிசை: 25
தகுதி பெற்ற விதம்: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தகுதிச் சுற்று முழுவதும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வலம் வந்திருந்தது தென் கொரியா அணி. தகுதி சுற்றில் ஜோர்டானை முந்தி குரூப் பி-யில் முதலிடம் பிடித்த பிறகு, 2025-ம் ஆண்டு ஜூன் 5 அன்று ஈராக்கில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 2002-ம் ஆண்டு 4-வது இடம்
கடைசி உலகக் கோப்பை: கத்தார் 2022, கால் இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேற்றம்
முதல் உலகக் கோப்பை: 1954-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 12
உலகக் கோப்பையில் எப்போதும் ஆபத்தான அணியாகக் கருதப்படும் தென் கொரியா, ஒழுக்கமான தற்காப்பு உத்திகளையும் மின்னல் வேக எதிர்த்தாக்குதல் திறனையும் கொண்டது. செக் குடியரசு போன்ற உடல் வலிமை மிக்க ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக இவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியும். மேலும், குவாடலஹாராவில் மெக்சிகோ அணிக்கு மிகக் கடுமையான சவாலை அளிக்கக்கூடிய உடற்தகுதியும் இவர்களிடம் உள்ளது.
நட்சத்திர வீரர்: சன் ஹியுங்-மின்
ஒட்டுமொத்த செயல் திறன்: ஆட்டங்கள்: 38, வெற்றி: 7, டிரா: 10, தோல்வி: 21, அடித்த கோல்கள்: 39, வாங்கிய கோல்கள்: 78
குரூப் ‘ஏ’ மோதல் விவரம்