சர்ச்சைகளின் கூடாரமான விஏஆர் | FIFA WC 2026

சர்ச்சைகளின் கூடாரமான விஏஆர் | FIFA WC 2026
Updated on
1 min read

போர்ச்சுகல் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தின் கூடு​தல் நேரத்​தின் இறுதி நிமிடங்​களில் குரோஷியா அணின் இவான் பெரிசிச் பந்தை பெனால்டி பகு​திக்​குள் உயர​மாக அனுப்​பி​னார். அதை மாரியோ பசாலிச் தலை​யால் முட்ட, பந்து யோஷ்கோ கிவார் டியோ வசம் சென்​றது. அவர், அதை எளி​தாக கோல் வலைக்​குள் செலுத்​தி​னார்.

இதனால் ஆட்​டம் 2-2 என சமநிலையை எட்​டிய​தாக குரோஷியா வீரர்​கள் கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். ஆனால் கோல் உடனடியாக அங்​கீகரிக்​கப்​பட​வில்​லை. நீண்ட நேர விஏஆர் பரிசீலனை நடை​பெற்​றது. அதில், குரோஷிய வீரர் ஐகோர் மடனோ​விச் பந்தை தொட்​ட​தாகக் கூறப்​பட்​ட​தால், அவர் ஆஃப்​சைட் நிலை​யில் இருந்​த​தாக முடிவு செய்​யப்​பட்டு கோல் மறுக்கப்பட்​டது.

ஆனால், குரோஷிய வீரர் ஐகோர் மடானோ​விச் உண்​மை​யில் பந்தை தொட்​டார் என்​பதை நிரூபிக்​கும் தெளி​வான காட்சி எதுவும் இல்​லாத நிலை​யிலும் கோல் ரத்து செய்​யப்​பட்​ட​தாக அறிவிக்​கப்​பட்​டது. இதற்கு பந்​தில் பொறுத்​தப்​பட்​டிருந்த சிப், ஐகோர் மடனோ​விச்​சின் தலை முடி பந்​தில் பட்​ட​தாக தரவு​களை அனுப்​பியதே காரணம். நடப்பு தொடரில் விஏஆர் சர்ச்​சைகள் தொடர்ந்த வண்​ணம்​ உள்​ளன.

சர்ச்சைகளின் கூடாரமான விஏஆர் | FIFA WC 2026
கடைசி நிமிடத்தில் விஏஆர் சர்ச்சை: குரோஷியாவை வீழ்த்தியது போர்ச்சுகல் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in