துனிசியாவை துவம்​சம் செய்த ஜப்பான்: 4-0 என்ற கணக்​கில் சாய்த்தது | FIFA WC 2026

துனிசியாவை துவம்​சம் செய்த ஜப்பான்: 4-0 என்ற கணக்​கில் சாய்த்தது | FIFA WC 2026
Updated on
1 min read

மான்​டேரி: உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் குரூப் எஃப் பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஜப்பான் 4-0 என்ற கோல் கணக்​கில் துனிசி​யாவை சாய்த்​தது.

மெக்​சிகோ​வின் மான்​டேரி நகரிலுள்ள எஸ்​டாடியோ மைதானத்​தில் நேற்று காலை 9.30 மணிக்கு இந்​தப் போட்டி நடை​பெற்​றது. ஆட்​டம் தொடங்​கிய 4- வது நிமிடத்​திலேயே ஜப்​பான் வீரர் டாய்ச்சி கமாடா ஒரு கோலடித்து அணிக்கு முன்​னிலை பெற்​றுத் தந்​தார். சக நாட்டு வீரர் கெய்டோ நகமுரா பாஸ் செய்த பந்தை கோல் வலையை நோக்கி அற்​புத​மாக அடித்​தார் டாய்ச்சி கமா​டா.

அவர் அடித்த பந்து துனிசியா கோல்​கீப்​பரை ஏமாற்றி கோல் வலை​யைத் துளைத்​தது. இதையடுத்து ஜப்​பான் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது. ஆட்​டத்​தின் 31-வது நிமிடத்​தில் ஜப்​பான் மேலும் ஒரு கோலடித்​தது. ஜப்​பான் வீரர் கோவு இடாகுரா கிராஸ் செய்து கொடுத்த பந்தை அழகாக வாங்கி கோலடித்​தார் அயாசே உவே​டா. இதனால் ஜப்​பான் 2-0 என்ற கணக்​கில் முன்​னிலையில் நீ​டித்​தது. முதல் பாதி வரை 2-0 என்ற நிலை நீடித்​தது.

ஆட்​டத்​தின் 2-வது பாதி​யில் ஜப்​பான் அணி​யின் 3-வது கோலை அடிக்க அயாசே உவேடா உதவி​னார். அயாசே உவேடா கடத்​திக் கொண்டு வந்த பந்​தை, ஜுன்யா இடோவை நோக்​கித் தட்டி விட்​டார். இதை லாவக​மாக பெற்ற ஜுன்யா இடோ, துனிசியா கோல்​கீப்​பரை ஏமாற்றி கோலடித்​தார். இதனால் ஜப்​பான் 3-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது.

இறு​தி​யில் அயாசே உவேடா தனது 2-வது கோலை அடிக்க ஜப்பான் 4-0 என்ற முன்​னிலைக்​குச் சென்​றது. இறுதி வரை இந்த நிலை நீடிக்​கவே ஜப்​பான் 4-0 என்ற கணக்​கில் துனிசி​யாவை துவம்​சம் செய்​தது.

இது பிஃபா உலகக் கோப்​பை​யில் நடை​பெற்ற 1000-வது போட்டியாகும். இந்த வெற்​றி​யின் மூலம் எஃப் பிரி​வில், ஜப்​பான் நாக்​-அவுட் முன்​னேறு​வதற்​கான நிலையை வலுப்​படுத்​தி​யுள்​ளது. மேலும், காலிறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு நேரடி​யாகத் தகு​திபெற, ஸ்வீட​னுக்கு எதி​ரான தங்​களது கடைசி லீக் ஆட்​டத்​தில், ஜப்பானுக்கு ஒரு புள்ளி மட்​டுமே தேவைப்​படு​கிறது. துனிசி​யா​ தனது 2 ஆட்​டங்​களி​லும் தோல்வி கண்​டுள்​ளது.

துனிசியாவை துவம்​சம் செய்த ஜப்பான்: 4-0 என்ற கணக்​கில் சாய்த்தது | FIFA WC 2026
ஐவரி கோஸ்ட்டை வீழ்த்​தி​ நாக்​-அவுட் சுற்றுக்கு ஜெர்மனி முன்னேற்றம் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in