

கலிபோர்னியா: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் டி பிரிவில் ஆஸ்திரேலியா, பராகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டம் சான்பிரான் சிஸ்கோ பே ஏரியாவிலுள்ள லெவிஸ் மைதானத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.
இந்தப் போட்டியின்போது இரு அணி வீரர்களும் கோலடிக்க தீவிர முயற்சி செய்தபோதும் கோலடிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த ஆட்டம் கோலின்றி டிராவில் நிறைவடைந்தது. இந்த போட்டியின் முடிவில் மொத்தம் 4 புள்ளிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா குரூப் டி பிரிவில் 2-ம் இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.